Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியலில் தலித் மக்களின் குரலாகவும், நாடாளுமன்றத்தில் சனாதன அரசியலுக்கு எதிரான வலுவான ஆளுமையாகவும் அறியப்படுபவர் விசிக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். இப்போது சிதம்பரம் மக்களவை உறுப்பினராக இருக்கும் அவர், திடீரென மாநில அரசியலை நோக்கித் தனது கவனத்தை திருப்பியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இது எந்த அளவுக்கு விசிகவுக்கு கை கொடுக்கும்?

வரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அவர் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, வெறும் தொகுதி மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு நீண்டகால அரசியல் வியூகத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

Thirumavalavan Kattumannarkoil vck Tamil Nadu Assembly Election 2026 2026

நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் குரல்களை விட, ஒரு மாநிலத்தின் உரிமைகளையும், மக்களின் தேவைகளையும் நேரடியாகப் பிரதிபலிக்கும் இடமாக சட்டமன்றமே திகழ்கிறது என்பது திருமாவளவனின் வாதம்.

தமிழ்நாட்டின் முகம்

"தமிழ்நாடு சட்டமன்றம்தான் தமிழ்நாட்டின் முகம்" என்று அவர் குறிப்பிட்டிருப்பது, தேசிய அரசியலை விட மாநில அரசியலில் நேரடியாகப் பங்கெடுப்பதன் மூலம் மட்டுமே ஆழமான மாற்றங்களை உருவாக்க முடியும் என்கிற அவரது முதிர்ச்சியான புரிதலைக் காட்டுகிறது.

அமைச்சராக வேண்டும் என்ற ஆசை தனக்கில்லை என்றும், ஒரு சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதே தனது நீண்டகால விருப்பம் என்றும் அவர் கூறியிருப்பது, அதிகாரத்தைக் காட்டிலும் மக்கள் பணியே முக்கியம் என்ற செய்தியைத் தொண்டர்களுக்கு உணர்த்துகிறது.

திருமாவளவன் ஏன் காட்டுமன்னார்கோவில்

திருமாவளவன் ஏன் காட்டுமன்னார்கோவில் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்பது மிக முக்கியமான கேள்வி. இந்த தொகுதி விசிகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட வரலாறு இங்கு அவருக்கு உண்டு. சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால், அங்குள்ள மக்களுடன் அவருக்கு இருக்கும் நேரடித் தொடர்பு மற்றும் கட்சியின் வலுவான வாக்கு வங்கி ஆகியவை இந்த முறை அவருக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

டெல்லியில் இருந்து சென்னைக்குத் திரும்புவதன் மூலம், தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் விரும்புவதாக தெரிகிறது.

"வேட்பாளர்களை நானே தேர்வு செய்யும் கடைசித் தேர்தல் இது" என்று அவர் வலியுடன் குறிப்பிட்டிருப்பது, கட்சியை அதிகாரப் பரவலாக்கல் நோக்கி நகர்த்த அவர் எடுக்கும் முயற்சியையே காட்டுகிறது. மாவட்ட நிர்வாகிகளே வேட்பாளர்களை முடிவு செய்யும் ஜனநாயக முறையை வி.சி.க-வில் கொண்டு வர அவர் விரும்புவது ஒரு ஆரோக்கியமான அரசியல் மாற்றமாகும்.

யாருக்கு சக்ஸஸ்?

திருமாவளவனின் வருகை காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பல முனைப் போட்டியை உருவாக்கினாலும், திமுக கூட்டணியின் பலம் அவருக்குப் பெரும் கவசமாக இருக்கும். அதே சமயம், இப்போதைய எம்எல்ஏக்களான ஷாநவாஸ், பாலாஜி போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சிறு வருத்தங்களை ஏற்படுத்தினாலும், தலைவரே களமிறங்குவதால் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்பதிலும் நோ டவுட்...!!.

எச்.ஏ.பி (H.A.P) போன்ற சமூகக் காரணிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் அவருக்குச் சவாலாக இருக்கலாம். இருந்தாலும், ஒரு தேசிய தலைவராக பரிணமித்த பிறகு அவர் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது, நடுநிலை வாக்காளர்களின் கவனத்தையும் ஈர்க்கும்.

காட்டுமன்னார்கோவில் தொகுதி

காட்டுமன்னார்கோவில் தொகுதியின் அரசியல் களம் கடந்த சில தேர்தல்களாகவே விசிக மற்றும் அதிமுக இடையே ஒரு கடுமையான மல்யுத்தக் களமாகவே இருந்து வருகிறது..

2021 சட்டமன்றத் தேர்தலில் விசிக வேட்பாளர் சிந்தனைச் செல்வன் 49.20% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 43.16% வாக்குகளுடன் மிக நெருக்கமான போட்டியைக் கொடுத்தது.. இந்தத் தொகுதியில் பட்டியலின மக்களின் வாக்குகள் சுமார் 36% ஆக இருப்பதால், அது விசிக-விற்கு ஒரு இயற்கையான பலமாக அமைகிறது..

இருந்தாலும், பாமக மற்றும் அதிமுக கூட்டணியின் ஒருங்கிணைந்த வாக்கு வங்கி விசிக-விற்கு எப்போதும் ஒரு சிம்மசொப்பனமாகவே இருந்து வருகிறது.. குறிப்பாக 2016 தேர்தலில் திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டதுதான் வரலாறு,

கள யதார்த்தம் என்ன?

இங்குள்ள கள யதார்த்தத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.. தற்போது திருமாவளவன் நேரடியாகக் களமிறங்குவது தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்தரப்பில் இருக்கும் வன்னியர் மற்றும் இதர சமூக வாக்குகளின் ஒருங்கிணைப்பு அவருக்கு ஒரு சவாலாக இருக்கும்..

அதுமட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஏன் மீண்டும் சட்டமன்றத்திற்கு வருகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் பரப்புரையையும், தொகுதி மக்களின் உள்ளூர் கோரிக்கைகளையும் அவர் திறம்பட எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், ஒவ்வொரு வாக்கையும் கவனமாகச் செதுக்க வேண்டிய கட்டாயத்தில் விசிக இம்முறை இருக்கிறது என்பதையும் நாம் இங்கு பதிவு செய்ய வேண்டி உள்ளது.. காட்டுமன்னார்கோவில் முடிவு விசிகவின் முன்னேற்றத்துக்கு உதவுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+