தீ பரவட்டும் என்று சொன்னேன்.. அது நாடாளுமன்றம் வரை பற்றிக்கொண்டது! வீடியோ போட்ட ஸ்டாலின்
சென்னை: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது தான் டா திமுக என்று கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார். தீ பரவட்டும் என்று சொன்னேன்.. அது நாடாளுமன்றம் வரை பரவிவிட்டது என்றும், முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட கருப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்த எல்லாருக்கும் நன்றி.. நன்றி.. எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த மசோதாக்கள் தொல்வியடைந்தது. 12 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய அரசு கொண்டு வந்த மசோதா நிறைவேறாமல் போனது இதுவே முதல்முறை. இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வணக்கம்.. மகிழ்ச்சியுடன், ஒரு புது எனர்ஜியுடன் உங்கள் முன் பேசுகிறேன்.. தொகுதிமறுவரையறை எனும் கருப்பு சட்டத்துக்கு எதிரான நம் போராட்டம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த ஆபத்தை ஒரு வருஷத்திற்கு முன்பே அறிந்து, இதில் வெற்றியை பெறுவதற்கான எல்லா பணிகளை நாம் செய்து வந்தோம். மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கி நேற்று முன் தினம் கருப்பு கொடி ஏற்றி கருப்பு சட்டத்தின் நகலை கொளுத்தினேன்.. அதுவே நேற்று திண்டுக்கல்லில் வெற்றிக்கான வெடியை கொளுத்தினேன்..
தீ பரவட்டும் என்று சொன்னேன்.. அது பார்லிமெண்ட் வரை பரவிடுச்சு.. 50, 60-களில் பார்த்த திமுகவை பார்க்க வேண்டி வரும் என்று சொன்னேன்.. அப்படின்னா என்ன என கேட்ட சில அரவேக்காடுகளுக்கு இது தான் டா திமுக பாருங்க என ஸ்ட்ராங்கா காட்டி இருக்கிறோம்.
#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 18, 2026
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!#வெல்வோம்_ஒன்றாக! https://t.co/h3WeTFv5ON pic.twitter.com/OyxQmotm4a
தொகுதி மறுவரையறை என்ற பெயரில், முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்ட கருப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்த எல்லாருக்கும் நன்றி.. நன்றி.." என்று கூறி தொகுதி மறுவரையறை நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும் என ட்வீட் பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications