இப்போது டெல்டாவில் நல்ல மழை.. மாலையில் இங்கெல்லாம் மழை பெய்யும்.. வெதர்மேன்
Recommended Video

சென்னை: காவிரி டெல்டாவில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இன்று மாலைக்கு மேல் தென் தமிழகத்திலும், மேற்கு தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை தொடர்கிறது. போதிய அளவிலான மழை இதுவரை பெய்யவில்லை என்ற போதிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென் தமிழகத்தி்ல் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
அதேபோல தென் தமிழகம், காவிரி டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:

2 நாட்களுக்கு மழை
இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்கள், உட்புறம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது காவிரி டெல்டாவில் உள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூரில் மழை பெய்து வருகிறது. கடலூர், அரியலூரிலும் மழை பெய்து வருகிறது.

மாலையில் பல மாவட்டங்களுக்கு
இன்று மாலை விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தேனி, நீலகிரி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் நல்ல மழை கிடைக்கும்.
வீரியம் குறையும்
நாளையும் மழை பெய்யும். அதேசமயம், வேகம் குறைந்து விடும். நாளை டெல்டாவில் நாகை, திருவாரூர், தஞ்சாவூரிலும், தென் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், உட்புற தமிழகத்தில் மழை பெய்யும்.

மழை நிற்கப் போகிறது
டிசம்பர் 1ம் தேதிக்குப் பிறகு பகல் நேரங்களில் பெய்யும் மழையின் அளவு குறையும் அல்லது நின்று விடும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications