டெங்கு பரவல் எதிரொலி! Dr சீட்டின்றி காய்ச்சல் மாத்திரை தராதீர்! மெடிக்கல்களுக்கு அரசு அறிவுறுத்தல்!
சென்னை: டெங்கு பரவல் எதிரொலியாக மருந்துக்கடைகளில் பொது மக்களுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெங்கு மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய மருந்து முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.
காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொது மக்கள் மருத்துவமனையை அணுகுமாறும் ,தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மற்றும் கடைகளில் பொது மக்களுக்கு (உரிய) மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகள் வழங்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொசு உற்பத்தியை தடுக்க 16005 எண்ணிக்கையில் புகை அடிக்கும் இயந்திரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளான பைரித்திரம் 66,889லி, மாலத்தியான் 1,28,721லி மற்றும் டெமிபாஸ் 49,593லி கையிருப்பில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த சிறப்புப் பயிற்சி மருத்துவ வல்லுநர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.
மழைக் காலங்களில் கொசு புழுக்கள், நீர்த்தேக்கங்களில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றிடவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
குடிநீர் மாசுபடாமல் தடுக்க, பாதுகாப்பான குடிநீர், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடைந்த குடிநீர் குழாய்களைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது.
காய்ச்சல் கண்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. எதிர் வரும் வடகிழக்கு பருவ மழையின் போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், பொது மக்களும் தங்கள் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் தேங்கா வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் போதிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications