தமிழ்நாட்டில் பரவும் டெங்கு.. 4277 பேர் பாதிப்பு.. 3 பேர் மரணம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். டெங்குவால் 4,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவலை தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெசன்ட் நகர் சாலையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்குவால் 4,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவலை தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் மூன்று மாதங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications