சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெங்குவா? கொரோனாவா? குழம்பும் கோவை.. சிக்கன்குனியாவை தடுக்க புதுச்சேரி அரசின் சூப்பர் திட்டம்..!

சிக்கன்குனியாவை ஒழிக்க பெண் கொசுக்களை புதுச்சேரி அரசு உருவாக்கி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.. அதேபோல, புதுச்சேரியிலும் டெங்கு மற்றும் சிக்கன்குனியா தீவிரமாக பரவி வரும் நிலையில், அவைகளை தடுக்க பெண் கொசுக்களை உருவாக்கி வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது,.

தமிழகத்தில் மீண்டும் கொரோனாதொற்று பரவல் அதிகரித்து வருகிறது.. இதனால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மீறினால் அபராதம், தனி நபர் இடைவெளி, மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் போன்ற அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.

எக்ஸ்னோரா நிர்மல் வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்- சென்னை மாநகராட்சி கால பந்தம்! எக்ஸ்னோரா நிர்மல் வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்- சென்னை மாநகராட்சி கால பந்தம்!

காலரா, டெங்கு

காலரா, டெங்கு

மற்றொருபக்கம், தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டதால், மேற்கு தொடர்ச்சி மலை, கேரள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது... மழைக்காலம் தொடங்கினாலே கொசுகளின் தொல்லை அதிகரிக்கும்.. அத்துடன், காலரா, டெங்கு போன்ற நோய்கள் இந்த மழைக்காலங்களில் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.. அதிலும் சிக்கன்குனியா போன்ற நோய்களும் கொசுவினால் ஏற்படும்..

புதுச்சேரி

புதுச்சேரி

அந்தவகையில், கோவை மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. கோவையில் தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பகுதிகளில் பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகம் பெருக்கம் அடைகின்றன.. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.. ஆனால், தங்களுக்கு வந்துள்ளது கொரோனாவா? டெங்கு காய்ச்சலா? என்ற பயத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.. இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா சொன்னதாவது:

காய்ச்சல்

காய்ச்சல்

''கோவையில் காய்ச்சலுக்கு தினமும், 10-15க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். அதில் சிலர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.. நோய் பாதிப்பு அதிகரித்தால், சமாளிக்க தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன... காய்ச்சல் ஏற்பட்டால், சுயமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்ன காய்ச்சல் என்பதை, மருத்துவர்தான் பரிசோதித்து முடிவு செய்ய முடியும் என்று விளக்கம் தந்துள்ளார். அதேபோல, புதுச்சேரியில் அரசும் டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை தடுக்கும் வகையில் புது திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது..

புதுச்சேரி

புதுச்சேரி

அதன்படி, பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது... புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் வைரஸ் இல்லா கொசுக்கள் உருவாக்கபட்டுள்ளது. ஆண் வகை கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது வைரஸ் இருக்காதாம்..

பெண் கொசுக்கள்

பெண் கொசுக்கள்

இதன்காரணமாகவே, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் இந்த பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர். இதற்கு வல்வாசியா என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாகவே, இதற்காக பிரத்தியேகமாக ஆராய்ச்சி செய்து இந்த அரிய வகை கொசுக்களை உற்பத்தி செய்துள்ளனர்... இதன் ஆராய்ச்சி முடிவுகளை விரையில் வெளியிட இந்திய ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.

English summary
dengue spreads in Kovai, Pudhucherry and can female mosquitoes be bred to prevent chicken pox சிக்கன்குனியாவை ஒழக்க பெண் கொசுக்களை புதுச்சேரி அரசு உருவாக்கி வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X