Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கவுண்ட்டில் ரூ.1000 வரலையா? இதோ வருதாம்.. தமிழக அரசு விரைவில் அறிவிப்பு.. 7 மாத கவலை தீரப்போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளிகளின், குடும்ப தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள், தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த கோரிக்கையும் கிளம்பி உள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விடுபட்டவர்களுக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

என்ன காரணம்: அரசின் நடவடிக்கைகள் இவ்வாறாக இருந்தாலும், ஒருசாரார் வருத்தத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.. இதில், முக்கியமானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்..

Denial of rs1000 Womens Rights and Will the subsidy for the elderly, differently abled be stopped for 7 months

மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்.. காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள்: அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, வாகனத்தின் 2 பக்கமும், கூடுதலாக 2 சக்கரங்கள் இணைக்கப்படும்.. இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, "4 சக்கர வாகனம்" என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.

எனவே, மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவியருக்கு, மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர். எனவே, இவர்களின் கோரிக்கையையும் அரசு பரிசீலித்து வருவதாகவே தெரிகிறது.

சமூக பாதுகாப்பு: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு கோரிக்கையும் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது எழுந்துள்ளது.. அதாவது, தமிழகம் முழுவதும் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் 7 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில், வருவாய்த் துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை,முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் 30.55 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது.

அடுத்த சிக்கல்: இந்நிலையில், கடந்த வருடம், ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.1,500 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.1,200 ஆகவும் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால், அந்த மாதத்திலிருந்து இதுவரை 7 மாதங்களாக உதவித்தொகையே வழங்கப்படவில்லையாம்.. புதிதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மட்டும் வழங்கப்பட்டு வருகிறதாம். அதனால்தான், உதவித்தொகை வழங்காததால் அவர்களும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.

பெரும் சிரமம்: தங்களுக்கு கை கொடுத்து உதவும் வாழ்வாதாரமே இந்த உதவித்தொகையும், இதுவும் 7 மாதங்களாக வராமல் உள்ளதால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்..

அதனால், விண்ணப்பித்து ஆணை பெற்ற 1 லட்சம் பேரும் உதவித்தொகைக்காக காத்திருக்கிறார்களாம்... ஆனால், இந்த மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடனேயே, அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை: அந்தவகையில், மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல், வருவாய்த்துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை விரைவில் கிடைக்கும் என்றும் நம்பப்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+