ஐஐடி மெட்ராஸ் இணையதளத்தை ‘ஹேக்’ செய்து சீட் கேட்ட மாணவன்.. மிரண்டு போன நிர்வாகம் கொடுத்த சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஐடி-யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சைபர் செக்யூரிட்டி படிப்பில் சேர தனக்கு சீட் கிடைக்காததால் ஐஐடி சென்னை மற்றும் ஐஐடி கான்பூர் இணையதளங்களை 'ஹேக்' செய்த மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவருக்கு இன்னொரு வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது ஐஐடி.

சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவின் முதல் செயல்முறை சார்ந்த 'இளநிலை சைபர் செக்யூரிட்டி' என்ற பட்டப்படிப்பை 2026-27 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் சைபர் செக்யூரிட்டி வல்லுநர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தப் படிப்பு ஐஐடி கல்வி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Denied IIT Admission

இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த நபர் ஒருவர், மாணவர் சேர்க்கை பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த மாணவர், ஐஐடி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தனது சைபர் செக்யூரிட்டி திறமையை நிரூபிக்கவும், சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி இணையதளப் பக்கங்களை 'ஹேக்' செய்துள்ளார்.

சென்னை ஐஐடியின் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையப் பக்கத்தை முடக்கிய அந்த நபர், "Site is Hacked, All I Need Is Just a Fair Chance" என்ற செய்தியை பதிவிட்டுள்ளார். அதாவது, இந்த ஹேக் மூலம் எனக்கு எந்தத் தீங்கு விளைவிக்கும் நோக்கமும் இல்லை... எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே" என்ற செய்தியை பகிர்ந்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு ஆர்வலர் என்று கூறப்படும் அந்த நபர், நியாயமற்ற அட்மிஷன் செயல்முறை தொடர்பாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறியுள்ளார். அவரது மெசேஜ் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த நபர் சென்னை ஐஐடி-யில் சைபர் பாதுகாப்பில் இளங்கலை அறிவியல் (BCyber) பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியும், தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தும், தனது சைபர் பாதுகாப்புப் பணிகளை வெளிப்படுத்தியிருந்தும், தான் அட்மிஷனுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி-யில் உள்ள நிர்வாக சர்வர்கள், டேட்டா செண்டர்கள், பணம் செலுத்தும் முறைகள், விண்ணப்பதாரரின் தகவல்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகளை தன்னால் அணுக முடிந்ததாக கூறியிருந்தார்.

கான்பூர் ஐஐடி இணையதளத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பலமுறை தெரிவித்ததாகவும், தனது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியதாகவும், ஆனால் தனது மின்னஞ்சல்களுக்குப் பதில் வரவில்லை என்றும் அந்த நபர் கூறியுள்ளார். தான் 13 வயது முதலே கோடிங் செய்து வருவதாகவும், தனது திறமையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

பொதுவாக இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் நடந்தால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு FIR பதிவு செய்யப்படும். எனினும், இந்த விவகாரத்தில் மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஐஐடி நிர்வாகம் வேறுவிதமான முடிவை எடுத்துள்ளது. அந்த மாணவரின் விவரத்தையும் ஐஐடி வெளியிடவில்லை.

இது குறித்து ஐஐடி கான்பூர் இயக்குநர் மணீந்திர அகர்வால் தெரிவிக்கையில், "ஹேக்கிங் போன்ற சட்டவிரோத செயல்கள் மூலம் வாய்ப்புகளைத் தேடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இருப்பினும், அந்த மாணவனின் எதிர்காலத்தைப் பாழாக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, எங்கள் C3iHub சைபர் செக்யூரிட்டி மையத்தில் அவருக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கி, அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு முயற்சி செய்ய அறிவுறுத்தப் பரிசீலித்து வருகிறோம். அதேவேளையில், இதுபோன்ற முறையற்ற வழிகளைப் பிற மாணவர்கள் பின்பற்றக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஐஐடி இணையதளம் ஹேக் செய்யப்பட்டது இணைய உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவனின் நோக்கம் எதுவாக இருந்தாலும், இந்த ஊடுருவல் சட்டவிரோதமானது என்றும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+