ஆஹா.. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஒரு பக்கம் சூறாவளி.. மறுபக்கம் கத்திரி.. திணறும் தமிழகம்

வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற போவதாகவும், அதனால், சூறாவளி வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.. கடந்த மார்ச் மாதமே வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து விட்டது..

அப்போதே இந்த மே மாசம் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் தமிழக மக்களை சூழ்ந்து கொண்டுவிட்டது.. அதற்கேற்றார்போல், ஏராளமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி செல்ல ஆரம்பித்துவிட்டது.

 அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் நேற்றைய தினம் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது என்றும் டாக்டர்கள் அட்வைஸ் தந்து வருகிறார்கள்.

 கத்திரி வெயில்

கத்திரி வெயில்

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நேற்று 7 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டான 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வட மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.. அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி வரை உள்ளதால், அதுவரை வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருப்பது நல்லது.

தேனி

தேனி

கத்திரி வெயில் கொளுத்தினாலும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது.. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. இந்நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

அறிவிப்பு

அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் அருகே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். இந்த பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மே 8ல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

Recommended Video

    சென்னை: கொளுத்தும் கோடை வெயில்... 1 முதல் 9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை!
     அக்னி நட்சத்திரம்

    அக்னி நட்சத்திரம்

    இதனால், தெற்கு அந்தமானில் இன்றும், நாளையும்.. தென்கிழக்கு வங்கக் கடலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கும், மத்திய கிழக்கு வங்க கடலில் மே 8 வரையிலும் மணிக்கு 75 கி.மீ., வேகம்வரை சூறாவளி காற்று வீசும். அதனால், குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஒருபக்கம் வெயில் மண்டையை பிளந்து வரும் நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மக்களுக்கு மகிழ்வை தந்து வருகிறது..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+