கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை... தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை: கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உருவாகி இருக்கும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே நிலை கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை விடாது கருப்பாக பெய்து கொண்டிருக்கிறது. கார்த்திகை 1ஆம் தேதி சரியாக தொடங்கிய மழை தை 1ஆம் தேதி வரைக்கும் விடாமல் வெளுத்து வாங்குகிறது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி விட்டன.

மார்கழியில் மழை குறைந்து விடும். தை மாதம் அறுவடைக்காலமாகும். இந்த ஆண்டு மார்கழியிலும் அடைமழை காலம் போல கடந்த ஒரு வாரமாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
போகி தொடங்கி காணும் பொங்கல் வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. சொன்னது போலவே விடிய விடிய விடாது மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உருவாகி இருக்கும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே நிலை கொண்டிருக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?











Click it and Unblock the Notifications