உச்சகட்ட பரபரப்பு.. களமிறங்கிய ஓ.பி.எஸ்.. விஜயகாந்துடன் சந்திப்பு.. புன்னகையுடன் ரிட்டர்ன்!
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சந்திப்பு நடத்தி இருக்கிறார்.
Recommended Video

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சந்தித்து பேச்சு நடத்தினார். திரும்பிப் போகும்போது ஓ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக தலைவர்களின் புன்னகைத் தாமரை மலர்ந்திருந்தது!
லோக்சபா தேர்தலுக்காக விஜயகாந்தின் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்று மிக பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது. தேமுதிக தொடர்ந்து இதில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

தேமுதிக என்ன செய்ய போகிறது என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாளை தேமுதிக சார்பாக தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து தற்போது விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரன்று சந்தித்து பேசினார். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அவர்களை வாசலில் நின்று வரவேற்றார் சுதீஷ்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓ. பன்னீர் செல்வம், நாளைக்குள் நல்ல முடிவு எட்டப்படும் என்று கூறி புன்னகையுடன் திரும்பிச் சென்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications