Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலேஜ் படிக்கும்போதே வீதியில் இறங்கி போராடியவர் துணை முதல்வர் உதயநிதி.. டிஆர்பி ராஜா சொன்ன மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா வளர்ப்பு மகனின் திருமணத்தை எதிர்த்து லயோலா கல்லூரியில் படிக்கும்போதே வீதியில் இறங்கி போராடியவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் எல்லாம் அவரை பரவலாக அறியும் காலத்திற்கு முன்பிருந்தே கட்சிக்காக உழைத்து வருபவர் துணை முதல்வர் உதயநிதி என தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக தேர்தல் களம் கண்டார் உதயநிதி ஸ்டாலின். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

udhayanidhi stalin deputy chief minister tamil nadu cabinet shuffle

துணை முதல்வர் உதயநிதி: கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரை கடிதத்திற்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். புதிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியானது.

டிஆர்பி ராஜா பேட்டி: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. 3 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

துணை முதல்வராகி உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சரும் திமுக ஐ.டி விங் மாநில செயலாளருமான டிஆர்பி ராஜா, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கருவில் இருந்தே கொள்கைப் பிடிப்பு கொண்டவர்கள்: அப்போது பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகியுள்ளார். உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அவர் படிப்படியாக அனுதினமும் இந்த இயக்கத்திற்காக மிகப்பெரிய அளவிற்கு தனது உழைப்பைக் கொடுத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

நாங்கள் கருவில் இருந்து திமுககாரர்கள். பிறந்த நொடியில் இருந்து திமுகவின் கொள்கைகளை உள்வாங்கியவர்கள். நாங்கள் எல்லாம் பார்த்திருக்கிறோம். அவர் சிறு வயதில் இருந்து கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு வந்ததை பார்த்திருக்கிறோம். அவர் நேரடியாக கள அரசியலுக்கு வந்தது 2016க்குப் பிறகு என்று சொல்கிறீர்கள்.

வீதிக்கு வந்து போராடியவர் உதயநிதி: ஆனால், 1996 காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுதாகரனுக்கு ஆடம்பர திருமணம் நடத்தியதை கண்டித்து, லயோலா கல்லூரியில் படிக்கும்போதே வீதியில் இறங்கிப் போராடியவர் உதயநிதி ஸ்டாலின். ஜெயலலிதா நடத்திய ஆடம்பர திருமணத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் இன்றைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

பல இடங்களில் கொடிகளை ஏற்றியவர். வீதி வீதியாகச் சென்று திமுகவுக்காக ஓட்டு கேட்டவர். அவரை பொதுமக்கள் பரவலாக அறியாத காலகட்டத்திலேயே கட்சிக்காக அத்தனை உழைத்தவர். அதன் காரணமாக திமுகவின் ஒவ்வொரு தொண்டன் மத்தியிலும் அன்பைப் பெற்றவர். அந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் உதயநிதிக்கு அவ்வளவு வரவேற்பு கிடைத்தது.

கேமராவுக்கு போஸ் கொடுப்பவர் அல்ல: எத்தனை போராட்டங்களில் அவர் நேரடியாக இறங்கி இருக்கிறார் என்பதை பலரும் பார்த்திருப்பீர்கள். அவர் நீங்கள் எல்லாம் அறிந்ததை விட பல காலத்திற்கு முன்பிருந்தே கட்சிக்காக உழைத்து வருபவர். இன்றும் ஆடம்பரம் இன்றி எளிமையாக இருக்கிறார். இண்டு இடுக்கு சந்து பொந்துகளில் எல்லாம் நேரடியாக இறங்கிச் செய்பவர் நம் துணை முதல்வர்.

மற்றவர்களைப் போல கேமரா ரெடியா எனக் கேட்டுவிட்டு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நின்று போஸ் கொடுப்பவர் அல்ல, இயல்பாகவே செய்யக்கூடியவர். களப்பணி என்றால் எதையும் யோசிக்காமல் செய்யக்கூடியவர். தொடர்ந்து மக்கள் பொறுப்பில் அவர் செயல்பட்டதைப் பார்த்து 2022ல் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் தலைமையின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை புரட்டிப் போட்டிருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

சுதாகரன் திருமணம்: ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியது அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம். 1996 காலகட்டத்தில் உலகமே வியக்கும் அளவுக்கு ஆடம்பரமாக சுதாகரனின் திருமணத்தை நடத்தினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உடன் பிறந்த அக்கா வனிதாமணியின் கடைசி மகன்தான் சுதாகரன்.

சுதாகரனுக்கும் சிவாஜியின் பேத்திக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் வலம் வந்தனர். இந்த திருமணம்தான், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உண்மை இருக்கலாம் என்று பலரையும் உறுதியாக நம்ப வைத்தது. 1996 சட்டசபை தேர்தலில் அதிமுக வரலாறு காணாத படுதோல்வியைச் சந்தித்தது. பர்கூரில் ஜெயலலிதாவே தோற்றுப்போனார்.

வளர்ப்பு மகன் பஞ்சாயத்து, மக்களால் ரசிக்கப்படவில்லை என்பதை அறிந்தோ என்னவோ, ஜெயலலிதா அதன்பிறகு சுதாகரனை நெருங்கவிடவில்லை. ஆனாலும் சொத்துக்குவிப்பு வழக்கு கடைசி காலம் வரை ஜெயலலிதாவின் காலை சுற்றிய பாம்பாக மாறியது தனிக்கதை. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அதேநேரம், சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவோடு சுதாகரனும் ஜெயிலில் இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+