Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2011ல் "கண்ணுங்களா"னு உருகியது முதல் இன்று வரை! ரஜினிகாந்த் மேற்கொண்ட சிகிச்சைகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2011 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் பார்க்கலாம். நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்துக்கு கடந்த சில நாட்களாக உடலில் அசவுகரியங்கள் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று மாலையே அப்பல்லோ மருத்துவமனைக்கு போன் போட்டு ரஜினிகாந்த் அட்மிட் ஆக இருப்பதை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துவிட்டனராம்.

rajinikanth apollo


இதையடுத்து அவர் தங்குவதற்கான அறைகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. இதையடுத்த அவருக்கு ரத்த நாளத்தில் ஏதேனும் அடைப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் ரஜினிக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவருக்கு ஆஞ்சியோவைவிட நவீன அறுவை சிகிச்சையையும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அவருடைய உடல் சீராக இருக்கிறது.

ரஜினியின் உடல் நிலை குறித்து அவருடைய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனினும் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு இல்லை என்பதால் சிலர் நிம்மதி அடைந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுவரை ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட சிகிச்சைகள் குறித்து பார்க்கலாம்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதால் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஒரு மாதத்திற்கு மேல் சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

அதுபோல் கடந்த 2020ஆம் ஆண்டு அண்ணாத்த படம் ஷூட்டிங்கின் போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அங்கிருந்து நேரடியாக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக சில நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போதுதான் அரசியலுக்கு வரும் எண்ணத்தை அவர் கைவிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மூளைக்கு செல்லக் கூடிய நரம்பில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அங்கு 4 நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் சில அறிவுறுத்தல்களுடன் வீடு திரும்பினார்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இரவு அவருக்கு அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டு அசவுகரியமாக இருந்ததை அடுத்து ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டுள்ளார். அவருக்கு அங்கு இதயவியல் துறையினர் பரிசோதனைகளை செய்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் ரசிகர்கள் யாரும் கவலைக் கொள்ளும்படியாக அவருடைய நிலை இல்லை என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் யாரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+