தேவயானி மகளா இது? இனியாவின் இனிய குரல்! அவர் நினைச்சா என்ன வேணா செய்யலாம்.. சரத்குமார் சொன்ன விஷயம்!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகள் இனியா கலந்து கொண்டு பவதாரணி பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலை பாடினார். தொடர்ந்து அவருக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில் நடிகையின் மகள் என்ற அடிப்படையில் அவர் சினிமாவிலேயே நேரடியாக பாடி இருக்கலாம். ஆனால், தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாகவும் அவரை பாராட்டுவதாகவும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஜீ தமிழ் சரிகமப சீனியர், ஜூனியர் என இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல பாடகர்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 5 பிரம்மாண்டமாக தொடங்கியது.
குறிப்பாக இந்த சீசனில் நடிகை தேவயானியின் மூத்த மகள் இனியா கலந்து கொண்டார். அந்த ஆடிஷனின் போது பவதாரணி பாடியிருந்த மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை இனியா பாடினார். கண்களை கட்டியபடி நடுவர்கள் அந்த பாடலைக் கேட்டு இனியாவை போட்டிக்கு செலக்ட் செய்தனர். அதற்குப் பிறகுதான் இனியா தேவயானி மகள் என்பதே நடுவர்களுக்கு தெரியுமாம்.

தனது மகள் தனது சொந்த முயற்சியால் முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில், அவராகவே முயன்று கலந்து கொண்டதாக நடிகை தேவயானியும் கூறியிருந்தார். இந்த நிலையில் தனது திறமையால் முன்னுக்கு வர வேண்டும் என்ற இனியாவின் தைரியத்தையும் நேர்மையையும் பாராட்டுவதாக நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," மக்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் திறமையான நடிகை தேவயானி அவர்களின் மகள் இனியா அவர்கள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல, Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 போட்டியாளராக, மறைந்த பாடகி பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி நம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். திறம்பட இசையை கற்று நேர்த்தியாக பாடி அசத்தியிருப்பது மிக மிக அருமை.
தமிழ் சினிமாவின் மாபெரும் கதாநாயகியின் மகள் என்ற பரிந்துரை கொண்டு, நேரிடையாக திரைப்பட பாடல்களில் பாடி இசையுலகில் தடம் பதித்திருக்க முடியும். ஆனால், தனது சொந்த முயற்சியால் உயர்ந்து சினிமாத்துறையில் கதாநாயகியாக சாதிக்க ஆர்வம் கொண்டு, சரிகமப நிகழ்ச்சி மேடையை சரியாக பயன்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.
தனது இனிய குரல் வளத்தால் இசையில் நம்மை மகிழ்வித்த இனியா, அவரது அதீத திறமையால் சினிமாத்துறையின் பல பாரிமாணங்களிலும், பல்வேறு மொழிகளில் பாடும் வாய்ப்பும் பெற்று வாழ்வில் மென்மேலும் உயர்ந்து, அவரது வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என கூறியுள்ளார். அந்த பதிவில் பலரும் இனியாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications