ராஜீவ் காந்தி கொலையானபோது அணிந்த தொப்பி, பேட்ஜ்; ஓய்வுபெறும் நாளில் அணிந்து நெகிழ்ந்த டிஜிபி பிரதீப்
சென்னை: காவலர் பயிற்சியின் டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பிரதீப் பிலிப், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின் போது தான் அணிந்திருந்த தொப்பியையும் பெயர் பேட்ஜையும், நீதிமன்ற அனுமதியுடன் அணிந்து பார்த்து பெருமிதம் அடைந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக 1991ம் ஆண்டு, மே 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்தார் அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி, பிரதீப்.வி. பிலிப்.

ராஜீவ் காந்தி கொலை
இந்த சம்பவத்தின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். பணியின்போது அவர் அணிந்திருந்த தொப்பி மற்றும் அவரது பெயர் பொறித்த பேட்ஜ் ரத்தக் கறையோடு தெறித்து விழுந்தது. எனவே, நீதிமன்றத்தின் முக்கிய சாட்சிகளாக அவை கையகப்படுத்தப்பட்டது.

பிரதீப் பிலிப் ஆசை
இந்த நிலையில், பல்வேறு பதவி உயர்வின் மூலம் காவல் பயிற்சி டிஜிபியாக பணியாற்றினார் பிரதீப் பிலிப். இன்று அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய போலீஸ் பணிக்கான கடைசி நாளில் அந்த தொப்பியையும், பேட்ஜையும் அணிந்து பார்க்க அவர் ஆசைபட்டார். எனவே, இந்த கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தில் பிரதீப் பிலிப் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் அனுமதி
பிரதீப் பிலிப் தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன் பிரதீப் பிலிப்புக்கு அந்த அந்த தொப்பியையும், பேட்ஜையும் அணிந்துகொள்ள அனுமதி தந்தார். எனவே, அவற்றை அணிந்து கொண்டு பணி ஓய்வு பெற்று, தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார் பிரதீப் பிலிப்.

நெகிழ்ச்சி
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றபோது, இந்த தொப்பி மற்றும் பேட்ஜை அவர் அணிந்திருந்தது நெகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

பணி வரலாறு
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட பிரதிப் பிலிப் 1987 நேரடியாக இந்திய காவல் பணிக்கு தேர்வாகி, தமிழக காவல்துறையில் தன் பணியைத் தொடங்கின 34 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளார். பிரதிப் பிலிப் போதை தடுப்புப் பிரிவு மற்றும் காவல் எஸ்.பி.யாக ராமநாதபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் பணியாற்றி உள்ளார். நெல்லை, திருச்சி ஆகிய மண்டலங்களில் டிஐஜியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications