காவல்துறையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.. இன்னும் ஒரே வாரம்! டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட ஆர்டர்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பட்டியலை ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும் ஆணையிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையமும், லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சொந்த ஊரில் அல்லது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியும் போலீசார் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒரே இடத்தில் 3 ஆண்டு பணி நிறைவடையும் அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்குமாறும் பதவி உயர்வு பெற்று சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ பணியில் இருந்தால் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் எஸ்.ஐ முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகளின் பட்டியலை வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றுள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் டிஜபி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதிகாரிகளை தேர்தல் பணிக்கு அனுப்பக் கூடாது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த சுற்றறிக்கையானது இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின் படி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு ஆதரவாக செயல்படலாம் என்பதால் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications