ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி.. வழிகாட்டுதல்களை வெளியிட்ட டிஜிபி சைலேந்திர பாபு! இதுதான் முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் சில இடங்களில் ஆபாச நடனங்கள் மற்றும் தகராறுகள் ஏற்பட்டன. இதனால் போலீசார் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் தான் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அந்த உத்தரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கும் போலீசார் அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் 8 வது நாள் அனுமதி கோரப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தலாம் எனும் வகையில் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு இன்று வெளியிட்டார்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நடக்க கூடாது. பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்க கூடாது. அதோடு பெண் கலைஞர்களுக்கு வேறு ஏதேனும் இன்னல்களை ஏற்படுத்த கூடாது. இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களை ஆடல், பாடலில் இடம்பெற செய்யக்கூடாது.
ஆடல், பாடல் நடத்துவது தொடர்பாக அனுமதி கோரிய மனு மீதான முடிவை 7 நாளில் எடுக்க வேண்டும். இந்த 7 நாளுக்குள் மனு மீதான முடிவு பற்றி விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். 7 நாளில் நடவடிக்கை இல்லாவிட்டால் அனுமதி என கருதி நிகழ்ச்சி நடத்தலாம். இருப்பினும் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள், ஆபாச நடனங்கள் இல்லை என்பதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் அருகே மது மற்றம் போதை பொருட்கள் விற்பனையை நடப்பதற்கான பணியை விழா குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழிக்காட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications