Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் மாதம் ஓய்வு..அடுத்த டிஜிபி யார்..ரேஸில் முந்தும் ஐபிஎஸ் அதிகாரி யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபியாக யார் நியமனம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டிஜிபி பதவிக்கான ரேஸில் மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் யாரை முதல்வர் ஸ்டாலின் டிக் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தின் டிஜிபியாக திரிபாதி இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில் அடுத்த டிஜிபியாக தமிழக அரசு யாரை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு காரணம் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர்கள், துறை கமிஷனர்கள், துறையின் செயலாளர்கள் என அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.

DGP Sylendra Babu retires in June Who will be the next DGP of Tamil Nadu

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி சைலேந்திர பாபு ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க பல்வேறு யுத்திகளை கையாண்டார்.

மிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்டவைகளை தடுக்கும் நடவடிக்கைகளில் சைலேந்திர பாபு அதிகம் கவனத்தை செலுத்தினார். ஆபரேசன் கஞ்சா 2.0 போன்றவைகளை அறிமுகம் செய்தார். சைபர் கிரைம் மோசடிகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்தார் சைலேந்திர பாபு

வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் நடைபெறும் கொள்ளைகளை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பான ஆலோசனையிலும் சைலேந்திர பாபு ஈடுபட்டு வருகிறார். சமூகவலைதளங்களில் அவ்வப்போது சமூக விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சைலேந்திரபாபு ஐபிஎஸ். சைபர் கிரைம் குற்றங்கள், ஆன்லைன் மோசடி, மேட்ரிமோனி மோசடி செய்வது உள்ளிட்டவைகள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சைலேந்திரபாபுவின் பணிக்காலம் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக இது போன்ற உயர் பதவிகளை வகிப்போர் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சீனியாரிட்டி அடிப்படையில் அடுத்து அந்த பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அந்தந்த மாநில அரசு அனுப்பி வைக்கும். பதவி மூப்பு அடிப்படையில் 3 பேரை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கும்.

தமிழக அரசு அடுத்த டிஜிபியாக சீனியாரிட்டி அடிப்படையில் சென்னை காவல் துறை கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால்,
மூத்த காவல்துறை அதிகாரிகள் ஏகே.விஸ்வநாதன், ஆபாஸ்குமார், சீமா அகர்வால் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த ஏ.கே.விஸ்வநாத் சென்னை கமிஷனராக இருந்த போது மூன்றாவது கண் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இவரது பணி வரலாற்றை எடுத்து பார்த்தாலும் ஒரு இடத்தில் கூட கரும்புள்ளி கிடையாது. அனைத்து தரப்பிலும் இவருக்கு நற்பெயரே இருக்கிறது. இதனால் இவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது.

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலை எடுத்துக் கொண்டால், சென்னை மாநகராட்சியில் நடைபெறும் வங்கி, ஏடிஎம் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்து சிறப்பாக செயல்படுகிறார் என்ற பெயர் உள்ளது. தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறார். இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கிறார். பல்வேறு காவலர்களுக்கு மருத்துவ உதவி, பண உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் அவரது பணி வரலாற்றில் ஒரு கரும்புள்ளி கூட இல்லாத அளவுக்கு நேர்மையானவர். எனவே இவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது.

சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாத் ஆகிய இருவரில் யாருக்கு புதிய டிஜிபியாக வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக முதல்வர் ஸ்டாலின் யாரை தேர்வு செய்வார், தனக்கு நெருக்கமான சங்கர் ஜிவாலையா அல்லது தமிழகத்தை சேர்ந்த ஏ.கே. விஸ்வநாத்தையா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

அதே நேரத்தில் ஜூன் மாதம் சைலேந்திர பாபு டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அதன்பிறகு டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டிஎன்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும். தற்போது டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபுவின் வயது 59 ஆகும். எனவே மிக விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சைலேந்திரபாபு தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்புகள் அதிகம் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+