"நோ" சொன்ன இறையன்பு.. நெக்ஸ்ட் ரெடியான டிஜிபி சைலேந்திர பாபு.. ஸ்டாலினுக்கு போன விஷயம்.. பரபர கோட்டை
சென்னை: டிஜிபி சைலேந்திர பாபுவின் பணிஓய்வு குறித்த முக்கிய செய்தி ஒன்று நமக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.. இதுகுறித்து கோட்டை வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் தலைமை பொறுப்பாக இருக்கும் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் காவல்துறையின் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பணிக்காலம் அடுத்தடுத்து நிறைவடையவிருக்கிறது...

எனவே, இந்த இருவர் இடத்திலும் அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது.. தலைமை செயலாளர் பதவிக்கு சிலர் குறி வைத்திருப்பதை போலவே, டிஜிபி பொறுப்புக்கும் ஒருசிலர் வேகமாக காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
லிஸ்ட்: இதுஒருபுறம் இருந்தாலும், சைலேந்திர பாபு அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற துணைக்கேள்வியும் வட்டமடித்து வருகிறது.. காரணம், முதலில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் லிஸ்ட்டை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிவைக்க வேண்டும்.. அதிலிருந்து 3 பேர் தேர்வுசெய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.. அதன் பிறகு 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வுசெய்யும்.. இதுதான் விதிமுறை.
எனவே அதற்கான நடைமுறைகள் ஒருபக்கம் நடந்து வருவதாக தெரிகிறது.. இதையடுத்து, தமிழ்நாட்டின் டிஜிபி யாகப் பதவி வகித்துவரும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் இந்த மாதம் ஓய்வுபெற உள்ளதால், ஓய்வுக்கு பிறகு, அரசு சார்ந்த மிகப்பெரிய பதவி ஒன்றில் அமர விரும்புகிறாராம்.. அந்த வகையில், கடந்த மாதமே இதுகுறித்து ஒரு செய்தி கசிந்தது..
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு விருப்பப்படுவதாக சொன்னார்கள்.. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படவில்லை.. சமீபத்தில்தான், டிஎன்பிஎஸ்சி அமைப்பில் காலியாக இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவலும் வெளியானது.. எனவே, இந்த மாத இறுதியில் சைலேந்திர பாபு ஓய்வு பெறும்நிலையில், விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்படலாம் என்று முணுமுணுப்புகள் கிளம்பின.
கூடுதல் தகவல்: இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, தலைமை செயலாளரும் விரைவில் பணிஓய்வு பெறுவதால், அநேகமாக இவரை, மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி நியமனம் செய்யலாம் என்றார்கள்.. ஆனால், தலைமை செயலாளர் பதவியை நிராகரித்து விட்டாராம்..
இதையடுத்து, "தலைமைச் செயலாளர்" தெரிவித்து விட்டதால், டிஎன்பிஎஸ்சி. சேர்மன் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று கோட்டை வட்டாரங்களில் சொல்லப்பட்டது.. ஆனால், அதையும் தலைமை செயலாளர் விரும்பவில்லையாம்.
சைலேந்திரபாபு: இதை அறிந்த சைலேந்திரபாபு, மறுபடியும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சேர்மன் பதவியை குறி வைத்துள்ளாராம்.. ஆனால், இதற்கும் சில முட்டுக்கட்டைகள் கிளம்பி உள்ளனவாம்.
அதாவது, டிஜிபியாக இருந்து எந்த ஒரு முக்கிய விசயத்திலும், சாதுர்யமாக செயல்பட்டதாக தன்னை சைலேந்திரபாபு நிரூபிக்கவில்லை.. அத்துடன், மிக மிக சென்சிட்டிவ்வான பதவியான டிஎன்பிஎஸ்சி சேர்மன் பதவியில் அவரை நியமித்தால், அது அவ்வளவாக ஆரோக்கியமாக இருக்காது என்று முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாம்.. ஆனால், இதற்கு மேலிட தரப்பு இதுவரை எந்த பதிலையும் சொல்லவில்லை.. அதேசமயம், சைலேந்திரபாபுவின் ஆசை நிறைவேறுமா? என்பது இந்த வாரத்தில் தெரியவரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications