வாழப்பாடி முருகேசன் இறப்பு.. கடுங்கோபத்தில் ஸ்டாலின்.. டிஜிபி திரிபாதி வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாகனச் சோதனையின்போது மக்களை தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாருக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜூன் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை நடத்தப்படுகின்றன. இது போல் வாகன தணிக்கையின்போது மது அருந்தி வாகனத்தில் வந்த சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.

கெட்டப்பெயர்

கெட்டப்பெயர்

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி ஜேகே திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து 50 நாட்களுக்குள்ளாகவே இதுபோன்று அரசு மீது கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதை முதல்வர் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

ஆட்சி

ஆட்சி

ஆட்சி பொறுப்பேற்றதும் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களால் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்காதவர்கள் வருந்தும் நிலை இருந்ததாக கூறப்படுகிறது. அத்தகைய நிலையில் சேலம் முருகேசன் மீதான போலீஸாரின் தாக்குதல் வெள்ளை பேப்பரில் கருப்புள்ளி போன்று களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

காவல் துறை

காவல் துறை

இதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதிக்கு இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது என்றும் பொதுமக்களை நண்பர்கள் போல் பார்க்க வேண்டும். அவர்கள் விதிகளை மீறினால் வழக்குப் பதிவு செய்யலாம், அபராதம் விதிக்கலாம். எக்காரணத்தை கொண்டும் அவர்கள் மீது தாக்குதலை நடத்தக் கூடாது என ஸ்டாலின் ஸ்டிரிக்ட்டாக சொல்லியிருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

காவலர்கள்

காவலர்கள்

இந்த சம்பவத்தால் முதல்வர் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கோபத்தில் இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே முதல்வரே நேரடியாக தலையிட்டிருப்பதால் இனி பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையிலான உறவு சுமுகமாக செல்லும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+