நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு.. சென்னை குடும்ப நல நீதிமன்றம் போட்ட உத்தரவு
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்கு இருவருமே ஆஜராகாததால் வரும் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்த வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பரஸ்பரம் பிரிவதாக இருவரும் அறிவித்தனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்த்து வைத்து இருவரையும் மீண்டும் இணைக்க அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்தனர். ஆனால் இருவருமே விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்துதான் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி பரஸ்பரம் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்கள் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாததால், வரும் 19 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications