தள்ளிப் போய் விளையாடுங்க தம்பிகளா.. தனுஷை சீண்டியது நயன்தாராவா? திடீர் தளபதியா? போட்டுடைத்த பிரபலம்!
சென்னை: குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. ரஜினிகாந்த் போல் தனுஷ் பேச முயற்சிப்பதாகவும், யாரை பேசுகிறார் என்றே தெரியவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் எந்த நடிகர்களுக்கும் வெளிப்படையாக பேச தைரியம் இல்லை என விமர்சித்திருக்கிறார் பிரபல திரை விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன்.
நடிகர் தனுஷ் நடிப்பில், தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், 'குபேரா' திரைப்படம் நாளை வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த படம் 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய பேச்சு தான் சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.
"என்ன காலி பண்ண நினைச்சா ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது.. என் ரசிகர்கள் இருக்கும் வரை நான் போய்க்கொண்டே இருப்பேன் என பேசினார் தனுஷ். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன் பட விழாக்களிலும் தனுஷ் இதே மாதிரி தான் பேசியிருந்தார். யாரை பேசுகிறார்? எதற்கு பேசுகிறார்? என்ன தெரியவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் தனுஷ் அதற்கு பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது குபேரா பட விழாவில் தனுஷ் இதே மாதிரி தான் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் எந்த நடிகர்களுக்கும் வெளிப்படையாக பேச தைரியம் இல்லை என விமர்சித்திருக்கிறார் பிரபல திரை விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன். இதுதொடர்பா அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இது கலி காலம். வெறுப்பு ஓங்கி நிக்கற காலம். தம்பிங்களா. கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க. என்னை காலி பண்ணனும்னு நெனச்சா ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது. தீப்பந்தம் போல என் ரசிகர்கள் உள்ளவரை நான் மேல போய்க்கிட்டே இருப்பேன் என தனுஷ் யாரை சொல்றாரு. எதுக்கு சொல்றாருன்னு யாருக்கும் புரியல.
நயன்தாராவை சொல்றதா ஒரு க்ரூப் பேசுது. திடீர் தளபதியை திட்டுறதா இன்னொரு க்ரூப் பேசுது. இந்த நடிகர்களுக்கு வெளிப்படையா பேசவும் தைரியம் இல்ல. பேசாம இருக்கவும் முடியல. ஒரே தமாசு தான். ஆடியோ, ட்ரைலர் லாஞ்ச்களை இப்படி ரசிகர் மன்ற கூட்டமா மாத்துறதே பலருக்கு வேலையா போச்சி. இந்த மாதிரி pre release பஞ்ச் எல்லாம் படம் வந்ததும் troll பண்ணத்தான் யூஸ் ஆகுது. படத்தை ஒழுங்கா எடுத்தா..அதை மக்களே பாராட்டி பேசுவாங்க.
இப்படி பேசுறதெல்லாம் பயங்கர cringe ஆகி ரொம்ப நாள் ஆனது இன்னும் இவங்களுக்கு தெரியலையா.. இல்லன்னா தெரிஞ்சும்.. இப்படி பேசி.. இருக்கற ரசிகர்களை ரசிக மனோபாவ மாய வலையை விட்டு வெளிய போயிடாம பாத்துக்கறாங்களா? படத்துல பொழுதுபோக்கு இல்லைன்னாலும்.. இந்த மாதிரி pre release பேச்சுகள் செம என்டர்டைன்மென்டா இருக்குடாப்பா. சாரோட மேடை மேனரிசம், டயலாக் டெலிவரி எல்லாம்.. தலீவர் பாணில இருக்கறது மக்களுக்கு ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட்." என கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications