நற்பணி மன்றமாக மாறிய பின்.. முதல் கூட்டமே மகளிர் அணிக்கு தான்.. திட்டம் தீட்டிய தனுஷ்.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி வரை தனுஷ்-ஐ அரசியலுக்கு வரவேற்றும், கண்டித்தும் பேசி இருக்கின்றனர்.

இப்படியான சூழலில் நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை சந்திப்பது அனைவரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், ரசிகர் மன்றமாக இருந்ததை நற்பணி இயக்கமாக மாற்றிய பின் நடக்கும் முதல் கூட்டம் இது. முதல் கூட்டமே மகளிரணி கூட்டமாக நடத்த தனுஷ் திட்டமிட்டு காய் நகர்த்தி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Dhanush

'கர' படத்திற்கு முன்பாகவே தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டார். பல்வேறு மாவட்டங்களிலும் தனுஷ் தனது ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்து பிரியாணி விருந்து கொடுத்தார். பெண்களுக்கு சேலை, பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் ஆகியவற்றை கொடுத்தார்.

அதன் உச்சம் தான் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ஆட்டோ கொடுத்தது. தற்போது மகளிர் அணியை புதிதாக உருவாக்கி அவர்களை சந்திக்க இருக்கிறார். இதுதொடர்பாக விசாரிக்கையில், நற்பணி இயக்கமாக 58 மாவட்டங்கள் இருக்கின்றன. அத்தனை மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. அப்போது தான் தனுஷ் தரப்பில் இருந்து பெரிய அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது நற்பணி மன்றமாக வலுவான கட்டமைப்பை உருவாக்க மகளிரின் ஆதரவு முக்கியம். அத்தனை மன்றங்களிலும் மகளிர் அணியை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மகளிரை மன்றத்தில் இணைத்து அவர்களுக்கு பொறுப்பு கொடுத்து நிர்வாகிகளாக மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பின் ஆயிரக்கணக்கான பெண்கள் நற்பணி இயக்கத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர்.

தனுஷ் நற்பணி இயக்கம் வளர்ச்சி அடைய விஜய்யின் அரசியல் எழுச்சியும் ஒரு வகையில் உதவி இருக்கிறது. தனுஷ் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு இருப்பதால், இப்போதே ஒரு துண்டை போட்டு வைப்போம் என்று பலரும் கணக்கு போட தொடங்கி இருக்கின்றனர். இதனால் தனுஷ் நற்பணி இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கு நல்ல ஆதரவும் இருக்கிறது. இதனால் தனுஷ் நற்பணி இயக்க நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+