ஏன் நாங்கல்லாம் டெல்லிக்கு போகக் கூடாதா? பாஜக தலைகளை பார்த்த தனுஷ்! ரஜினியோட வாங்க.. சீரியஸ் அட்வைஸ்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து முதல்வராகி இருக்கும் நிலையில் பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது, அந்த பட்டியலில் சமீபத்திய வரவு தான் தனுஷ். திடீரென தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்ற போவதாக யூகங்கள் கிளம்பி இருக்கும் நிலையில்ம், திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் சில முக்கிய பாஜக தலைவர்களை தனுஷ் சந்தித்து பேசியதாகவும், ரஜினியின் ஆசியோடு வந்தால் தங்கள் ஆசீர்வாதமும் இருக்கும் என பாஜக தலைகள் உத்திரவாதம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
தமிழ் திரை உலகையும் அரசியலையும் அவ்வளவு சீக்கிரம் பிரித்து முடியாது. சொல்லப்போனால் கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்டவர்களில் பெரும்பாலானோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் என அந்த பட்டியில் நீண்டு கொண்டே போகும்.

இடையில் எம்ஜிஆர்ஐ பார்த்து அரசியலில் சூடு போட்டுக் கொண்டவர்களும் ஏராளம். சிவாஜி கணேசன், தொடங்கி டி ராஜேந்தர் வரையும் அந்த பட்டியலும் நீளும். இடையில் எம்பி, எம்எல்ஏக்களாக பல நடிகர்கள் நடிகைகள் பணியாற்றி இருக்கின்றனர்.
தவெக விஜய்
இந்த நிலையில் எம்ஜிஆர் பிறகு கட்சி ஆரம்பித்த புதிதிலேயே ஆட்சியை பிடித்து அசாத்திய சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் விஜய். குறிப்பாக இரண்டே ஆண்டுகளில்.. அதுவும் முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்திருப்பது அவ்வளவு எளிதல்ல. விஜயின் இந்த எழுச்சியை பார்த்து பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. திடீர் திடீரென ரசிகர்களை சந்திப்பது, கொடி அறிமுகம் என பட்டையை கிளப்பி வருகின்றனர் ரசிகர்கள். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பலர் இருந்தாலும் தற்போது தீவிரமாக இயங்கி வருகிறார் தனுஷ்.
தனுஷ்
சினிமா துறைக்கு வந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும் திடீரென ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் தனுஷின் கொடி அறிமுகமும் சமீபத்தில் அரங்கேறியது. இந்த நிலையில் தான் தனுஷ் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியை பதிவு செய்ய தான் தனுஷ் சென்றிருக்கிறார் என பல யூகங்கள் கிளம்பியுள்ளன.
தனுஷ் ரசிகர் மன்றம்
என்ன நடக்கிறது? என விசாரிக்க போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டு நம்மிடம் பேசிய தனுஷ் ரசிகர் மன்றத்தினர்," விஜய் போல பெரிய செல்வாக்கு இல்லை. எனினும், தமிழக மக்களுக்கு நன்கு பரிட்சையம் ஆனாவர் தனுஷ். அதே நேரத்தில் அவரது முன்னாள் மாமனரான ரஜினிகாந்துக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி என சொல்லி பத்தாண்டுகள் கடந்துவிட்டது.
லதா ரஜினிகாந்த்
அதற்கு முன்னதாக அரசியலுக்கு வரப்போவதாக பலமுறை அறிக்கையை விட்டு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தார் ரஜினிகாந்த். இதற்கிடையே அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வகையில் தனுஷும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நாங்கள் அழைப்பு விடுத்தோம். இப்போதைக்கு வேண்டாம் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என தனுஷ் சொன்னார்.
பாஜக தலைவர்கள்
ஆனால் பெரும்பாலும் நிர்வாகிகள் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தான் தனுஷ் தற்போது டெல்லி சென்றிருக்கிறார். டெல்லி பயணத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சில பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்" என்கின்றனர்.
ரஜினிகாந்த்
கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவழைக்க பாஜக தீவிரமாக முயன்றது. அதனை ரஜினியும் ஏற்றுக் கொண்டுதான் இருந்தார். ஆனால் பாஜக ஆதரவாளர் என்று முத்திரையை பலமாக முன்வைத்ததும், உடலில் கோளாறு ஏற்பட்டதும் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவிடாமல் செய்துவிட்டது. இந்த நிலையில் மாமனார் விட்டதை பிடித்து விட வேண்டும் என்பதற்காக தனுஷ் தற்போது அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார்.
டெல்லி பயணம்
அதற்காகத்தான் டெல்லி பயணம். அதே நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் பணியில் லதா ரஜினி காந்த் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது ஆசியோடு நீங்கள் அரசியலுக்கு வந்தால் எங்கள் ஆசீர்வாதமும் இருக்கும் என பாஜக தலைவர்கள் சிக்னல் கொடுத்தார்களாம். அதே நேரத்தில் தனுஷ் தயங்கிய நிலையில் 'ஃபண்டிங்' உள்ளிட்ட வேலைகளை நாங்கள் பார்த்துக்கிறோம். நீங்கள் கட்சியை ஒருங்கிணைக்கும் வேலையை பாருங்கள் எனவும் சீரியஸ் அட்வைஸ் கொடுத்து உள்ளார்களாம்.
பாஜக டீம்
இந்த நிலையில் தனுசால் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், விஜய்க்கு இருக்கும் ஆதரவ வட்டத்தை ஓரளவு சரிக்க முடியும் என்பதால் பாஜகவின் இன்னொரு டீம் ஆகவே தனுஷ் களமிறங்குகிறார் என விமர்சிக்கின்றனர் விஜய் ஆதரவாளர்கள்.


Click it and Unblock the Notifications
