தாராபுரத்தில் வென்றாலும் மூலனூரில் கோட்டை விட்ட தவெக! கைவிட்ட வஞ்சியம்மன் கோயில் விசிட்! திமுக செம

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டசபை தொகுதிக்குள்பட்ட மூலனூர் ஒன்றியத்தில் தவெகவைவிட திமுகவுக்கு 800 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது. மூலனூர் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 6 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

Dharapuram by poll

இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தாராபுரத்தில் மொத்தம் 23 சுற்றுகள் உள்ள நிலையில் 22 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. அதில் மீதம் 5,699 வாக்குகள் மட்டுமே தாராபுரத்தில் எண்ண வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தவெக வேட்பாளர் சத்தியபாமா 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் இருக்கிறார். இதனால் அவரது வெற்றி உறுதியானது.

காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதிலிருந்தே சத்தியபாமா முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் குண்டடம் என்ற பகுதியில் எண்ணப்பட்ட வாக்குகளின் போது அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார்.

இதையடுத்து கடைசி வரை சத்தியபாமாவே முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் மூலனூர் ஒன்றியத்தில் எண்ணப்பட்ட வாக்குகளில் தவெகவை விட திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றது. இந்த மூலனூரில் குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் வசிக்கிறார்கள். மேலும் தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ நடத்திய போது மூலனூர் வஞ்சியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார்.

அங்கு அவர் சென்றதற்கு காரணம் கொங்கு வேளாள கவுண்டர்களின் வாக்குகளை குறி வைத்து என சொல்லப்பட்டது. அந்த கோயில் அந்த சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்குச் சொந்தமானது. அவர்கள் அங்கு வழிபாடு நடத்துவார்களாம்.

இங்கு சென்றால் அந்த சமூக வாக்குகள் எல்லாம் தவெக பக்கம் சாயும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெகவைவிட திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றது, சமூக குறியீடுகளை விட திமுகவின் களப்பணியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரிகிறது.

ஒரு அரசியல் தலைவர் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்திற்கு சென்றுவிட்டாலே அந்த சமூகத்து வாக்குகள் கிடைத்துவிடும் என்ற கேரண்டி இல்லை என்பதே மூலனூர் சொல்லும் பாடமாகும். தொகுதியில் ஒட்டுமொத்த அலையிலும் ஒரு அரசியல் கட்சி வென்றாலும், குறிப்பிட்ட கிராமங்கள், ஒன்றியங்களில் பாரம்பரியமான கட்சிகளுக்கென நிலையான வாக்கு இருக்கும். அவை இந்த முறையும் சிந்தாமல் சிதறாமல் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு கிடைத்துள்ளது என்பது மூலனூர் சொல்லும் யதார்த்தம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+