சில்வர் ஜூப்ளி அடிக்கும்னு பாத்தா.. தெறிக்க விட்ட தாராபுரம்! வேதனையில் விஜய்..குஷியில் லோக்கல் கைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சற்றே கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மதுராந்தகத்தில் மாஸ் காட்டி விடலாம் என நம்பிக்கையில் இருந்தாலும், தாராபுரத்தில் வேட்பாளர் சத்யபாமாவை விரட்டி அடித்து வருவதால் வேதனையில் இருக்கிறார் விஜய் என்கின்றனர். இதனால் செங்கோட்டையனும் சீக்ரெட் மிஷனுக்கு தயாராகி வருகிறாராம்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார் முதல்வர் விஜய். இந்நிலையில் அவருக்கு முதல் அக்னி பரிட்சையாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது.

by election 2026 Dharapuram Sathyabama Sengottaiyan

அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேலும், தாராபுரம் சத்யபாமாவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தல்

தற்போது அந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. கடடந்த சட்டசபை தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவிய நிலையில், இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கூட்டணி தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் களம் இறங்குகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம்

இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியை பொருத்தவரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமான சூழலே நிலவுவதாக சொல்கின்றனர். குறிப்பாக விஜய் பிரசாரத்திற்கு பிறகு அங்கு ஆதரவு சற்று பெருகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது தவெகவுக்கு ஆதரவு மோசமான நிலையில் இருப்பது தாராபுரம் தான். கடந்த தேர்தலில் விஜய் அலையையும் தாண்டி தாராபுரத்தில் சத்தியபாமா வென்றிருந்தார்.

சத்யபாமா

தனிப்பட்ட ஆதரவோடு, இரட்டை இலைக்கான வாக்கு வங்கி அவரது வெற்றிக்கு கை கொடுத்தது. ஸ்வீட் பாக்ஸ் விநியோகமும் தாராளமாக இருந்ததால், தவெகவும், திமுகவும் 2ஆம், 3ஆம் இடங்களுக்கு தள்ளப்பட்டன. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சத்யபாமா போட்டியிடும் நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்கள் எல்லாம் துரோகி துரோகி என முழக்கமிட்டு சத்யபாமாவை விரட்டியடித்து வருகின்றனர்.

விஜய்

மேலும் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கச் செல்லும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கும் அதேபோல் தான் நடக்கிறது. இதை அடுத்து விஜய்க்கு ஒரு அறிக்கை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மதுராந்தகத்தில் சாதகமான சூழல் நிலவும் நிலையில், தாராபுரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

செங்கோட்டையன்

இதை அடுத்து அங்கு இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யலாமா என விஜய் ஆலோசித்து வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் தாராபுரத்துக்கு செங்கோட்டையன் பொறுப்பை ஏற்றிருக்கும் நிலையில் அதிமுகவில் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கப் போகிறார் என்கின்றனர். கடைசி நேரத்தில் சில கட்சிகள் பலமான கவனிப்பை வாக்காளர்களுக்கு வழங்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கின்றனர் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+