#Exclusive திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் குடமுழுக்கு வேகமா நடக்குது.. தருமபுரம் ஆதீனம் பேட்டி!
சென்னை: தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அவரது பேட்டியில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவில்களுக்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார்.
கேள்வி: தமிழ்நாட்டில் சைவ மடங்கள் செய்து வரும் பல்வேறு கல்வி, சமூகம் சார்ந்த பணிகள் பற்றிய புரிதல் மக்களிடம் இருக்கிறதா?
தருமபுரம் ஆதீனம்: இன்றைக்கு ஊடக வளர்ச்சியின் காரணமாக ஓரளவுக்கு வெளியில் தெரிகிறது. ஆனால் முன்பு வெளியில் தெரியாமலேயே தொடர்ச்சியாக பணிகளை செய்து வந்திருக்கிறோம். கலைஞர்களை அரசர்கள் தான் பாராட்டி விருதுகள் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், அதற்கு முன்பே வித்வான்கள், பாடகர்கள், கிராமிய கலைஞர்களுக்கு தங்கம் வழங்கி பாராட்டி இருக்கிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல் வெளியீடுகளை ஆதினத்தில் இருந்து செய்திருக்கிறோம்.

திருமுறைகளை தருமபுரம் ஆதீனம் சார்பில் புத்தகம் வடிவில் 12 மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளோம். செயலி வாயிலாகவும் திருமுறைகளை வெளியிட்டுள்ளோம். 1930 காலகட்டத்தில் சிவாச்சாரியார்களுக்கான வகுப்புகளை தருமபுரம் ஆதீனத்தில் தொடங்கினோம். தேவாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தேவார பாடசாலை அமைத்தோம். ஆகம பாடசாலைகளை அமைத்துள்ளோம். திருக்குறள் உரை விளக்கங்களை வெளியிட்டுள்ளோம்.
அரசாங்கம், ஓட்டு வங்கிக்காக ஆதினங்களுக்கு வர வேண்டிய குத்தகை தொகையை தள்ளுபடி செய்துவிடுகிறது. ஆதீன நிலங்களைப் பராமரிப்பவர்களுக்குத்தான் வெள்ள நிவாரண, வறட்சி நிவாரண இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. ஆதீனங்களுக்கு இதனால் இழப்பு ஏற்படுகிறது. எதை வைத்து தரும பணிகளை மேற்கொள்வது?
ஒருவன் தவறு செய்கிறான் என்று சொன்னால் 2 காரணங்கள் இருக்கும். ஒன்று வயிற்றுப் பசி, இன்னொன்று கல்வி அறிவு இல்லாமை. அந்த இரண்டையும் கொடுத்து விட்டால், அவன் நல்லவனாக இருந்து இந்த நாடு நன்மையடையும். பாரதியாரின் கனவை நனவாக்கும் வகையில், தருமபுரம் ஆதீன கல்வி நிறுவனங்களில் காலையிலேயே மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கேள்வி: தமிழ்நாடு அரசியல் காட்சிகளை கவனிக்கிறீர்களா? அறநிலையத்துறையின் இப்போதைய செயல்பாடு எப்படி இருக்கிறது? அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்காக செய்யும் பணிகள் எப்படி இருக்கிறது?
தருமபுரம் ஆதீனம்: நான்கைந்து குழுக்கள் இருந்ததால், அவை ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்குவதற்கு அதிக கால தாமதம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 80க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திவிட்டோம். குடமுழுக்கு நடத்துவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் அறநிலையத்துறை மீட்டிங்கில் 200 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி பிறப்பிக்கப்படுகிறது.
கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு கொடுப்பதில் இந்த அரசு விரைவாகச் செயல்படுகிறது. அந்தவகையில் இந்த அரசை பாராட்ட வேண்டும். ஆதீனங்களைப் பற்றி புரிந்துகொண்ட அரசு என்பதால், மற்ற அரசுகளை விட சிறப்பாக பணியாற்றி வருகிறது இன்றைய திமுக அரசு.
குன்றக்குடி அடிகளாரை எம்.எல்.சி ஆக்கி அரசியல் பணிகளில் செலுத்தினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. யாராவது ஒருவராவது அரசியலில் இருக்கலாம் என முடிவெடுத்து அவர் எம்.எல்.சி ஆக்கப்பட்டார். நான் திருப்பனந்தாளில் தம்பிரானாக இருந்தபோது கருணாநிதி, கோ.சி.மணி மூலம் எனக்கும் பதவி கொடுப்பதற்காக வந்து கேட்டார்கள்.
கடவுளையே கை காட்டி நின்ற ஞானசம்பந்தரின் வாரிசுகள், சட்டசபை சபாநாயகர் முன் கைகட்டி பதில் சொல்லும் நிலை வேண்டாம் என்று எழுதியே அனுப்பினேன். கருணாநிதி அதைப் பார்த்து வியந்து பாராட்டினார். இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அரசியலில் ஸ்டாலின் 'ரைசிங்'.. கோவப்பட்ட மம்தா? ராகுலின் மௌன யுத்தம்.. பின்னணி என்ன? -
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிப்பு.. மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறிய ஆலங்குளம் தொகுதி -
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனிச் செயலர்.. இப்போது புதிய தலைமைச் செயலாளர்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
செல்வந்தர் அதிமுக வேட்பாளர் ₹1000 கோடி.. தமிழக அமைச்சர்களின் மனைவியர் பெயரில் சொத்து மதிப்பு பாருங்க -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை.. அடுத்த ஐந்து நிமிடத்தில் ட்விஸ்ட் -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா?












Click it and Unblock the Notifications