தருமபுரியில் தித்திக்கும் மாம்பழம்? களமிறங்கிய அன்புமணி மகள்கள்! சவுமியா வெல்வாரா? தந்தி டிவி சர்வே
சென்னை: தருமபுரி லோக்சபா தொகுதியில் யார் வெல்வார்கள் என தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் சவுமியா அன்புமணிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள விஐபி தொகுதிகளில் முக்கியமானது தருமபுரி தொகுதியாகும்.

இங்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு தருமபுரி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, 2019ஆம் ஆண்டு திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம் தோல்வியுள்ளார்.
இந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனது மனைவியை தருமபுரி தொகுதியில் களமிறக்கியுள்ளார். சவுமியா அன்புமணிக்காக அவருடைய மகள்கள் சம்யுக்தா, சம்சுத்ரா, சங்கமித்ரா ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். சங்கமித்ரா தனது கணவர், குழந்தையுடன் தருமபுரியில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்தார்.
தருமபுரி தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேசிய போது ராமதாஸின் ஆதரவாளர்களால் அவருக்கு சிறப்பு வரவேற்பு கிடைத்தது. தனது தாய் வென்றால் என்னென்ன திட்டங்கள் கிடைக்கும் என்பது குறித்தும் சங்கமித்ரா தெரிவித்திருந்தார். பாஜகவின் கூட்டணியில் களமிறங்கியுள்ள சவுமியா அன்புமணி வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பசுமைத் தாயகம் என்ற ஒரு அமைப்பை வைத்து நடத்தி வருகிறார் சவுமியா. தருமபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர்.
2021 சட்டசபை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 3-ல் அதிமுக; 2-ல் பாமக வென்றது. தருமபுரி லோக்சபா தொகுதி எம்பியாக இருந்தவர்களில் 5 எம்பிக்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதியில் பாமக 4 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை, அதிமுக, காங்கிரஸ் 2 முறை வென்றுள்ள்ன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஒரு முறை இத்தொகுதியில் வென்றிருக்கிறது.
தருமபுரி தொகுதியில் வன்னியர்கள் 35%; தலித்துகள் 25% ; கொங்கு கவுண்டர்கள் 15%; இதர சமூகத்தினர் 25% உள்ளனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்த முறை திமுக சார்பில் ஆ.மணியும் பாமக சார்பில் சவுமியா அன்புமணியும், அதிமுக சார்பில் டாக்டர் அசோகனும் நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவனும் போட்டியிட்டுள்ளனர்.
வரும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் தந்தி டிவி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு 34 சதவீத வாக்குகளும் பாமக வேட்பாளர் சவுமியாவுக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு 26 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.
இந்த தொகுதியில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தருமபுரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு பாமக முன்னேறி வருவது தெரிகிறது. இதில் கடைசி நேரத்தில் திமுகவோ அல்லது பாமகவோ யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற நிலை உள்ளது.
தருமபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கும் பாமகவுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. அவர்களுக்கு செல்வாக்கும் இருக்கிறது. அதே வேளையில் பாலக்கோட்டில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் செல்வாக்கு உள்ளது. அரூரிலும் பாமகவுக்கு செல்வாக்கு உள்ள நிலையில் இந்த தொகுதியில் யார் வெல்வார்கள் என்பதில் இழுபறி நீடிக்கிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications