"பல்லை" பிடுங்கியாச்சு.. குழி பறிக்கும் பாஜக சீனியர்கள்.. அண்ணாமலை ஏமாற்றம்.. திமுக எம்பி ட்வீட்
சென்னை: தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையின் அதிகாரங்களை தலைமை பறித்துவிட்டதால் விரக்தியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைத்துள்ளார் என திமுக எம்ப செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு கடுமையாக உள்ளது. அதிலும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் பாஜகவினருக்கும் இடையே பயங்கர கருத்து மோதல் ஏற்பட்டது.

அமைச்சர் பிடிஆர்
இதையடுத்து அமைச்சர் பிடிஆரின் காரை வழிமறித்து பாஜகவினர் செருப்பு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த செருப்பு வீச்சு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செருப்பு வீச்சு குறித்து பேசியதாக தெரிகிறது.

ஆடியோ வைரல்
இந்த ஆடியோ வைரலான நிலையில் இதில் உள்ள குரல் என்னுடையதுதான், ஆனால் அதில் பேசிய சில கருத்துகளை திமுகவினர் சேர்த்தும் நீக்கியும் உள்ளனர் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் பிடிஆர் அவர்களே உங்கள் முன்னோர்களின் இனிஷியலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமாக உருவான விவசாயியின் மகனை ஏற்க முடியாது.

பெரிய பரம்பரை
பெரிய பரம்பரையிலும் வெள்ளிக் கரண்டியிலும் பிறந்ததை தவிர்த்து இந்த ஜென்மத்தில் நீங்கள் பயனுள்ள எதையாவது செய்துள்ளீர்களா. நீஙகள் அரசியலுக்கும் தமிழக மாநிலத்திற்கும் சாபக் கேடு. என் செருப்புகளுக்கு கூட நீங்கள் தகுதியில்லை என தரம் தாழ்ந்து அமைச்சர் பிடிஆரை அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதை திமுகவினர் கண்டித்து வருகிறார்கள்.

திமுக எம்பி செந்தில்குமார்
இதுகுறித்து திமுக எம்பி செந்தில்குமார் கூறுகையில், அண்ணாமலை விரக்தியிலும் ஏமாற்றத்திலும் பேசி வருகிறார். அவரது செயல்பாடுகளில் பாஜக தலைமைக்கு திருப்தி இல்லை. அவரது செயல்பாடுகளை கவனிக்க மத்திய இணை அமைச்சர் முருகனை தேசிய பாஜக தலைமை நியமித்துள்ளது. மேலும் அண்ணாமலையின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. தேசிய பாஜக தலைமையை திருப்திப்படுத்துவதாக நினைத்து எதை எதையோ செய்து வருகிறார். அவருக்காக பெரிய குழியை கட்சியின் மூத்த தலைவர்கள் பறித்து வருகிறார்கள் என செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் அதிகாரம் பறிப்பு?
கே டி ராகவன் வீடியோ விவகாரம், பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு, அது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ உள்ளிட்டவைகளால் அண்ணாமலை மீது தலைமை அதிருப்தியில இருக்கிறதாம். இதனால் அண்ணாமலையின் தலைமை பதவியை பறிக்காமல் அவரது அதிகாரங்களை மட்டும் குறைத்துள்ளது. இதற்காக மத்திய இணை அமைச்சர் எல் முருகனை மீண்டும் தமிழக பாஜகவை பார்த்துக் கொள்ளும்படி அவருக்கு கமலாலயத்தில் தனி அறையே ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதைத்தான் திமுக எம்பி கூறுகிறார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications