ஓ.பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடா? புன்னகையுடன் தர்மர் சொன்ன பதில்! இதை யாரும் எதிர்பார்க்கல
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான தர்மர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அணி மாறுகிறீர்களே.. ஏதும் பஞ்சாயத்தா? கருத்து வேறுபாடா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு தர்மர் சொன்ன பதில், கவனம் பெற்றிருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகளில் முக்கிய தலைகள் இணைவதும், நீங்குவதுமாக களம் பரபரப்பாகியிருக்கிறது. அந்த வகையில் இன்று, களத்தை பரபரப்பாக்கியவர்தான் தர்மர்.

யார் இந்த தர்மர்
கடந்த 2022ம் ஆண்டுதான் தர்மர் வாழ்க்கையில் ஒளி வெளிச்சம் வந்தது. அதுவரை அதிமுகவில் சாதாரண ஒன்றிய செயலாளராகத்தான் இருந்தார் தர்மர். முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராகவும் பணியாற்றியிருந்த தர்மர், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்தார். அப்போது எடப்பாடிக்கும், ஓபிஎஸ்-க்கும் இடையே முட்டல் மோதல்கள் இருந்தன. அப்போது நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 2 சீட்கள் நிச்சயம் அதிமுகவுக்கு கிடைக்கும் சூழல் இருந்தது.
காலியான கூடாரம்
எனவே ஒரு சீட், ஒபிஎஸ்-க்கு கொடுக்கப்பட்டது. இதனை தனது ஆதரவாளரான ஆர்.தர்மருக்கு கொடுத்தார் ஓபிஎஸ். இப்படித்தான் தர்மர் எம்பியானார். அப்புறம் என்ன ஜூலையில் நடந்த மாநாட்டில் ஓபிஎஸ் நீக்கப்பட.. அன்று முதல் தன்னை ஓபிஎஸ் ஆதரவாளராக மாற்றிக்கொண்டார் தர்மர். எனவே எடப்பாடி டீமிடம் பெரியதாக டச் இல்லை. இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்கள் ஓபிஎஸ் அணியில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
இரண்டாம் கட்ட தலைவர்கள்
அதாவது, ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் என பெரும் தலைகள்.. அப்படியே திமுகவில் ஐக்கியமாகினர். ஒரு கட்டத்தில் ஒபிஎஸ் திமுகவுக்கு செல்வார் என்று சலசலப்புகள் எழ.. அவரை நம்பியிருந்த இரண்டாம் கட்ட தலைகள் தெறித்தனர். இப்படியாகத்தான் தர்மர் தற்போது எடப்பாடி தலைமைக்கு கீழ் வந்து சேர்ந்திருக்கிறார்.
மனக்கசப்பா?
இத்தனை காலம் ஓபிஎஸ் தான் எல்லாம் என்று இருந்தீர்களே! திடீரென எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் இந்த மாற்றம்? உங்களுக்கும் ஓபிஎஸ்-க்கும் மனக்கசப்பா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப.. சிரித்துக்கொண்டே.. எனக்கு யாருடனும் மனக்கசப்பு கிடையாது என்று சொல்லி.. அடுத்த கேள்விக்கு இடம் கொடுக்காமல் நழுவிக்கொண்டார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications