தர்மேந்திர பிரதான் சொத்து மதிப்பு எவ்வளவு? இதுவரை சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன?
சென்னை: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் குதித்தது. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று முதலில் கூறிய மத்திய அரசு, மாணவர்கள், இளைஞர்களின் நடத்திய தீவிர போரட்டத்தால் பணிந்து வழிக்கு வந்தது.
நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். கல்வித்துறை தற்போது கூடுதல் பொறுப்பாக பிரகலாத் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான் சொத்து மதிப்பு, அவர் இதுவரை சந்தித்த சர்ச்சைகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பதவி விலகினார்
பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை தர்மேந்திர பிரதான் வகித்துள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்து இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சராக பிரதான் நியமனம் செய்யப்பட்டர்.
பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியில் தன்னை இணைத்துக்கொண்ட தர்மேந்திர பிரதான், கட்சியில் படிப்படியாக பல பொறுப்புகளை பெற்றார். ஒடிசாவை சேர்ந்த தர்மேந்திர பிரதானின் தந்தையும் அரசியல் பிரமுகர்தான். அவரது தந்தை தீபேந்திர பிரதான் பாஜகவின் முத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். மத்திய அமைச்சர பதவியையும் வகித்துள்ளார். தர்மேந்திர பிரதானுக்கு மிருதுளா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
அசையும், அசையா சொத்துக்கள் எவ்வளவு?
தர்மேந்திர பிரதானின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.6.38 கோடி என்று தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆண்டு வருமானம் 2022 - 23 ல் ரூ.12.74 லட்சமாகவும் அவரது மனைவி மிருதுளா தாகூரின் வருமானம் அதே ஆண்டில் ரூ.49 லட்சமாக இருந்துள்ளது. மகள் நமிஷவின் வருமானம் ரூ.4.6 லட்சம் என்று கூறியுள்ளார்.
தர்மேந்திர பிரதானுக்கு மட்டும் ரூ.1.99 கோடிக்கு சொத்து உள்ளது. அசையும் சொத்து ரூ.1.39 கோடிக்கும் அசையா சொத்து 92 லட்சத்திற்கும் உள்ளது. மனைவிக்கு ரூ.4.12 கோடிக்கு சொத்து உள்ளது. அசையும்சொத்தாக ரூ.2.95 கோடியும் அசையா சொத்தாக 1.37 கோடியும், பொறுப்புகள் 20 லட்சத்திற்கும் உள்ளது.
தர்மேந்திர பிரதான் சந்தித்த சர்ச்சைகள்
2022-ஆம் அண்டு கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது, உயர் கல்வி சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 2022 ஆம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ திட்டம் கொண்டு வந்தார். இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே நிதியை விடுவிப்போம் என்று தர்மேந்திர பிரதான் கறார் காட்டினார்.
இதையடுத்து பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால் தமிழகம் இன்று வரை இந்ததிட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் நிதியை ஒதுக்க முடியாது என்று கூறி வருகிறார். நீட் மட்டுமின்றி, ஜே இ இ, கியூட், யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையால் முன்னெடுக்கப்பட்ட தேர்வுகளில் நிர்வாக குளறுபடிகள் தொழில் நுட்ப கோளாறு, தவறான மதிப்பீடு என பல சர்ச்சைகள் எழுந்தன.


Click it and Unblock the Notifications
