இவ்வளவு நாள் தெரியலையா 'கேப்டன்' ஹெல்த் சரியில்லைன்னு.. திருந்தவே மாட்டீங்க.. அழகிரி மகன்

விஜயகாந்த்தை தலைவர்கள் சந்தித்து வருவது குறித்து தயா அழகிரி ட்வீட் போட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இவ்வளவு நாள் தெரியலையா கேப்டன் ஹெல்த் சரியில்லைன்னு - தயா அழகிரி ட்வீட்

    சென்னை: "இவ்ளோ நாள் தெரியலயா யாருக்கும் கேப்டன் விஜயகாந்த்துக்கு ஹெல்த் சரி இல்லைன்னு.. நீங்க திருந்தவே மாட்டீங்க" என்று காரசார ட்வீட் ஒன்றினை முக அழகிரி மகன் தயா அழகிரி பதிவிட்டுள்ளார்.

    விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பியதில் இருந்தே தமிழக அரசியல் பரபரப்பாகி உள்ளது. அதிமுக-பாஜகவுடன் கூட்டணி இழுபறி என்றதும் தேர்தல் களம் சூடானது. 3-வது அணி உருவாகலாம் என்று கமல் போற போக்கில் கொளுத்திவிட்டு போகவும், அது இன்னும் சூடு பிடித்து கொதிக்க ஆரம்பித்துவிட்டது.

    Dhaya Azhagiri Tweet

    இதையடுத்து மாறி மாறி அரசியல் தலைவர்கள் விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். இனியும் சிலர் வருவதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், முக அழகிரி மகன் தயா அழகிரி ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில், "இவ்ளோ நாள் தெரியலயா யாருக்கும் கேப்டன் விஜயகாந்த்துக்கு ஹெல்த் சரி இல்லைன்னு.. நீங்க திருந்தவே மாட்டீங்க" என்று பதிவிட்டுள்ளார்.

    ivalo naal theriyalaya yaarukum Captain Vijayakanth ku health seri ilanu ? 🤔
    neengha thirundhavey maateenga

    "நீங்க திருந்தவே இல்லைன்னு" தயா அழகிரி சொன்னது யாரை என்றுதான் தெரியவில்லை. கட்சியில சேர்த்துக்கோ, சேர்த்துக்கோ என்று அவரது தந்தை மிரட்டியும் கெஞ்சியும் சித்தப்பா மசியவில்லை என்பதாலா அல்லது, "என்னை அண்ணன் என்றே அன்போடு அழைப்பார்" என்று சொன்னதும் மதுரையில் உள்ள அண்ணனை நினைக்காமல் விட்டுட்டாரே சித்தப்பா என்ற எண்ணம் வந்ததாலா தெரியவில்லை!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+