10,000 பொறியியல் மாணவர்கள் தேர்வில் தோல்வியா? அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு
சென்னை: பொறியியல் தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 பேரை தேர்வு எழுதவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு பொறியியல் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி நடைபெற்றது.
இதற்காக தேர்வு தொடங்கும் நேரத்தில் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் எண்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வானது காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணிக்கு நிறைவடையும். குறிப்பிட்ட நேரத்துக்குள் விடைத்தாளை மாணவர்கள் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவு. இதைத் தாண்டி ஒன்றரை மணி நேரத்துக்குள் அதாவது பிற்பகல் 2 மணிக்குள் விடைத் தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

10,000 மாணவர்கள் தாமதம்
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும், கூடுதல் நேரத்தையும் கடந்து சுமார் 10,000 மாணவர்கள் விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இவ்வாறு கால தாமதமாக விடைத் தாள் பதிவேற்றம் செய்த மாணவர்களை தேர்வில் பங்கேற்காதவர்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பதாக தகவல் வெளியானது.

பரபரப்பை ஏற்படுத்திய தகவல்
விடைத் தாள்களை திருத்தம் செய்யும் பணிக்கு வந்த ஆசிரியர்களிடம், தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள்களை திருத்தக் கூடாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களை ஆப்செண்ட் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், "மாணவர்கள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தது உண்மைதான். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் தரப்பில் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆப்செண்ட் போடப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை." எனக் கூறி இருக்கிறார்.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு உயர்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்த தேர்வு
அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மார்ச் மாதம் வரை நடைபெற்று முடிந்துள்ளது. காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்ற தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications