Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை மீனாவின் கணவர் கடைசியாக பேசியது "இது"தானா.. கையில் அஸ்தி.. கண்ணில் நீர் மல்க..துடித்த பரிதாபம்

மீனாவின் கணவர், கடைசியாக மகளிடம் பேசியது என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை மீனாவின் கணவர், மகளுடன் பேசிய கடைசி வார்த்தைகள், மற்றும் மீனா தம்பதி இடையே மனக்கசப்புகள் இருந்தன என்பது குறித்தெல்லாம் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர்... இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ல் திருமணம் நடந்தது.. நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

Recommended Video

    Meena Husband பற்றி Radhakrishnan பேட்டி | *TamilNadu

    நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

     அலர்ஜிகள்

    அலர்ஜிகள்

    புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோய் வித்யாசாகருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.. பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.. இதனால் ஏற்பட்ட அலர்ஜி சுவாசப் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

     ஜெயலலிதா எக்மோ

    ஜெயலலிதா எக்மோ

    6 மாத காலமாகவே அவர் சிகிச்சையில் இருந்தாலும், எப்படியாவது குணமடைந்துவிடுவார் என்றுதான் மீனா குடும்பத்தினர் நம்பி இருந்துள்ளனர்.. கொரோனா தாக்கிய நிலையில், தொற்றில் இருந்து கூட குணமடைந்துள்ளார். ஆனால், நுரையீரல் பாதிப்பை சரி செய்ய முடியாமல் போயுள்ளது.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தந்த, எக்மோ சிகிச்சைதான் இவருக்கும் தரப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட கடந்த 95 நாட்கள் சுய நினைவே இல்லாமல் இருந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்துள்ளது.

     செல்லம் அதிகம்

    செல்லம் அதிகம்

    மீனாவை பொறுத்தவரை இது அவருக்கு மிகப்பெரிய இழப்பு... மீனாவின் அப்பா இறந்த பிறகு, அவரது இடத்தில் இருந்து குடும்பத்தையே வழிநடத்தியது வித்யாசாகர் தான் என்கிறார்கள்.. குழந்தையில் இருந்தே மீனாவை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார் அவரது அம்மா.. இது திரையுலகில் எல்லாருக்குமே தெரிந்த உண்மை. மீனாவை எப்படி வளர்த்தாரோ, அதுபோலவேதான் வித்யாசாகரும் மீனாவை கவனித்து கொண்டு வந்துள்ளார்.. இவரது அஸ்தியை மீனா இருகைகளிலும் ஏந்தியதை கண்டு, குடும்பத்தினர் இதயமே வெடித்து கதறியதை காண முடிந்தது.

     மர்மங்கள் - காயங்கள்

    மர்மங்கள் - காயங்கள்

    எனினும், வழக்கம்போலவே, இந்த மரணத்திலும் மர்மங்கள் உள்ளதாக சிலர் தகவல்களை சோஷியல் மீடியாவில் கிளப்பிவிட்டு வருகின்றனர்.. அதாவது, வித்யாசாகர் உடம்பில் காயங்கள் நிறைய இருந்தனவாம்.. மருத்துவமனையில் மாதக்கணக்கில் சிகிச்சை பெற்று வரும் இவருக்கு எப்படி உடம்பில் காயங்கள் வந்திருக்கும்? என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, சமீபகாலமாகவே, மனைவி மீது கணவருக்கு சந்தேகம் இருந்ததாகவும், இதனால் கடைசி 4 மாத காலம் மீனா, தன்னுடைய கணவருடன் பேசவில்லை என்றும் சொல்கிறார்கள்.

     கடைசி பேச்சு

    கடைசி பேச்சு

    தான் இறப்பதற்கு முன்பு, மகளுக்கு போனை செய்த வித்யாசாகர், "அப்பா பிழைப்பது கடினம்.. அம்மா பேச்சை கேட்டு இனி சமத்தா நடந்துக்கணும்" என்று சொல்லி, போனிலேயே முத்தம் தந்ததாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன.. 3 மாத காலம் சுயநினைவே இல்லாத ஒருவர், சாகப் போகும் அன்று மட்டும், போனை போட்டு மகளிடம் எப்படி பேசியிருக்க முடியும்? இந்த ஒரு சாதாரண விஷயத்தைகூட யோசிக்காமல், சகட்டுமேனிக்கு தகவல்களை சிலர் பரப்பி கொண்டு வருகின்றனர்.

     அநாகரீகம்

    அநாகரீகம்

    ஒருவர் இறந்தபிறகு, அவரை பற்றி விமர்சிப்பது அநாகரீகம் என்றபோதிலும், தேவையில்லாத மற்றும் உறுதியில்லாத விஷயங்களை சோஷியல் மீடியாவில் விஷமவாதிகள் தொடர்ந்து பரப்பிவிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.. ஒருவரின் தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் அத்துமீறி, மூக்கை நுழைப்பதுடன், எதையுமே நேரில் பார்க்காமல் அவதூறுகளை அள்ளி வீசுவதையும் நாம் கண்டிக்க வேண்டி உள்ளது.. அதுமட்டுமல்ல, என்னதான் வாய்கிழிய பேசினாலும், வலிகளும், வேதனைகளும், இழப்புகளும், சம்பந்தப்பட்ட பரிதாபத்துக்குரிய மீனாவுக்கும், அவரது குழந்தைக்கும் தான் என்பதை விஷமவாதிகள் மறந்துவிடக்கூடாது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+