அமித்ஷாவிடம் பதறியடித்து ஓடிய அதிமுக "தலை".. "திமுகவா?.. ஹிஸ்டரி எடுங்க".. கூலாக டீல் செய்த மேலிடம்

அமித்ஷாவை சென்று சந்தித்து பேசினாராம் தம்பிதுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 நாட்களாகவே அதிமுக கலங்கி போயுள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில், டெல்லி மேலிடம் திடீரென ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த முறை வேலுமணிக்கு சொந்த 600க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மென்டில் தங்கியிருந்த வேலுமணியை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் கணக்கு போட்டிருந்தனராம்.

ஆனால் இந்த விஷயம் தகவல் முன் கூட்டியே அறிந்த வேலுமணி அங்கிருந்து உடனடியாக வெளியேறி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு சட்டமன்ற விடுதிக்கு வந்துவிடவும், அதிகாரிகள் தரப்பு அதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் அதனால், எம்எல்ஏ ஹாஸ்டலிலேயே விசாரணை மேற்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.

வேலுமணி

வேலுமணி

மேலும் கடந்த முறை 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பெரிய அளவிலான பணம் எதுவும் கிடைக்காத நிலைமையில், இந்த முறை அலர்ட்டாக இருக்கவும் அதிகாரிகள் முடிவு செய்து, அதன்படியே ரெய்டு நாள் குறிக்கப்பட்டது.. கோயில் திருவிழாவில் வேலுமணி ஒயிலாட்டம் ஆடிக் கொண்டிருந்தபோது, கனகச்சிதமாக இந்த சோதனைக்கு பிளான் போட்டனர்.. இப்படி 2வது முறையாக மீண்டும் ரெய்டு நடத்துவார்கள் என்று வேலுமணி கொஞ்சமும் நினைக்கவில்லை.. அதிமுக மேலிடம் மொத்தமும் அதிர்ந்து போய் உட்கார்ந்துவிட்டதாம். மேலும் கடந்த முறை 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பெரிய அளவிலான பணம் எதுவும் கிடைக்காத நிலைமையில், இந்த முறை அலர்ட்டாக இருக்கவும் அதிகாரிகள் முடிவு செய்து, அதன்படியே நாள் குறிக்கப்பட்டது.. கோயில் திருவிழாவில் வேலுமணி ஒயிலாட்டம் ஆடிக் கொண்டிருந்தபோது, கனகச்சிதமாக சோதனையை துவங்கினர் அதிகாரிகள்.. இப்படி 2வது முறையாக மீண்டும் ரெய்டு நடத்துவார்கள் என்று வேலுமணி கொஞ்சமும் நினைக்கவில்லை.. அதிமுக மேலிடம் மொத்தமும் அதிர்ந்து போய் உட்கார்ந்துவிட்டதாம்.

 அதிமுக தம்பிதுரை

அதிமுக தம்பிதுரை

இதற்கு பிறகுதான் அதிமுகவின் தம்பிதுரை, பதறியடித்து கொண்டு பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சென்று சந்தித்தாராம்.. அந்த சந்திப்பின் பின்னணி குறித்து திமுக அரசு அறிந்து கொள்ள முயற்சித்து வருகிறது..- எனினும், இந்த சந்திப்பு குறித்து நாம் தனியாக விசாரித்தோம்... தம்பிதுரைக்கு நெருக்கமான அதிமுக சீனியர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சொன்னதாவது:

ரெய்டுகள்

ரெய்டுகள்

"பிரதமரை சந்தித்த தம்பிதுரை, தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக நடக்கும் ரெய்டுகளை விவரித்திருக்கிறார். பிரதமரோ, நாங்களும் கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்.. அமித்ஷாவிடம் பேசுங்கள் என சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.. அமித்ஷாவை சந்தித்த தம்பிதுரை, திமுக அரசு பழி வாங்கும் நோக்கத்தில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டுகளை நடத்துகிறது. இதனை தடுத்து நிறுத்த லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குரை மத்திய அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஊழல்கள்

ஊழல்கள்

அதற்கு அமித்ஷா, தவறு செய்யாதபோது எதற்கு பதட்டமடைய வேண்டும். அரசியலில் இதனையெல்லாம் எதிர்க்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அரசியலில் நான் எதிர்கொள்ளாத பிரச்சனைகளா? உங்களுக்கு எதிராக ஆளும் கட்சி செயல்பட்டால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், ஆளும் கட்சியின் ஊழல்களை ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். 10 மாதத்துக்கு முன்பு வரை உங்க ஆட்சிதானே தமிழகத்தில் இருந்தது? உங்களுக்கு ஒத்துழைத்த அதிகாரிகள் தானே, இந்த ஆட்சியிலும் இருக்கிறார்கள்?

டேமேஜ்

டேமேஜ்

அவர்களிடமிருந்து ஆதாரங்களை திரட்டி திமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் ஆளும் கட்சிக்கு கடிவாளம் போட முடியும் என அமித்ஷா ஆலோசனை சொல்லியிருக்கிறாராம். இதனை எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார் தம்பிதுரை என்கிறார்கள் அதிமுகவினர்.. இப்போது எடப்பாடி தரப்பு வேகம் எடுத்துள்ளதாம்.. ஊழல் புகார்களை மட்டுமே கொண்டு திமுகவை டேமேஜ் செய்ய முடியும் என்பதால், அதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாம் மேலிடம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+