Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா? எடப்பாடி பழனிசாமியையா? மாஜி எம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா இல்லை எடப்பாடி பழனிசாமியையா என முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தலையா? அல்லது எடப்பாடி பழனிசாமியையா?

vikravandi assembly by election 2024 edappadi palanisamy k c palanisamy 2024

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் வாபஸ் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே காங்கிரஸ் இந்துத் தொகுதியில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது அந்தத் தொகுதியில் நோட்டா 2.18 லட்சம் வாக்குகள் பெற்றது. இதுதான் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வது.

இதேபோல தான் அதிமுக, #விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தேர்தல் புறக்கணிப்பு என்றால் அதிமுகவினர் யாரும் வாக்குச்சாவடி பக்கமே செல்லக்கூடாது. வாக்குப்பதிவு சதவிகிதம் குறைய வேண்டும் அது தான் தேர்தல் புறக்கணிப்பின் அர்த்தமாகும். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 82.48%. இதன் மூலம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இவ்வாறு தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று பதிவான வாக்குகள் அடங்கிய விவரத்தை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து புகைப்படம் எடுத்தும் போட்டுள்ளார். அதில் ஜூன் 21 ஆம் தேதி வரை வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்கள் 116962 பேரும் பெண்கள் 120040, மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேரும் உள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் இன்று 95536 ஆண்களும், 99944 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 195495 வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு சதவீதம் 82.48 சதவீதம் ஆகும். இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இந்த தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஜனநாயக முறைபடி இந்த இடைத்தேர்தலை ஆளும் கட்சி நடத்த விடாது என்றும் இதற்கு திருமங்கலம் தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் என பல முன்னுதாரணங்கள் உள்ளன என்று கூறி அதிமுக புறக்கணித்துவிட்டது. அது போல் இந்த தேர்தலில் பாமகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக கேட்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தங்கள் பேனரில் வைத்து பாமக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டதாலேயே பாமகவுக்கு அதிமுகவினர் வாக்களிப்பார்கள் என சொல்ல முடியாது என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதால் அதிமுகவினர் யாரும் தேர்தலை புறக்கணிக்கவில்லை என்ற பாயிண்ட்டைத்தான் கே.சி. பழனிசாமி முன் வைத்துள்ளார். அது போல் ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக அவர், அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை தொடங்கி போராடியும் வருகிறார். தொடர்ந்து தேர்தல் தோல்விகளால் அதிமுகவினர் மனம் வேதனையில் உள்ள நிலையில் பிரிந்து கிடப்போர் ஒன்று சேர்ந்தால்தான் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் அதிமுக வசமாகும் என தொண்டர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு முத்தாய்ப்பாக அதிமுகவை சேர்ந்த 6 முன்னாள் அமைச்சர்கள், ஒருங்கிணைந்த அதிமுக குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும்தான் சுமார் இரண்டரை மணி நேரம் எடப்பாடியை உலுக்கி எடுத்திருக்கிறார்கள்.

தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல... பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை... இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள்... இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை... பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம்... இனியும் தாமதிக்கக் கூடாது... இதுதான் ஆறு பேர் முன்வைத்த வாதங்கள்.

எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றே சொல்லியிருக்கிறார். ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க... வாதங்கள் தடித்து... முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும்.

அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது ஆறு பேர் குழு. அப்போது குழுவினர் எண்ணிக்கை அதிகமாகலாம்!

நாரதர் கலகம் மட்டுமல்ல... ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும்... முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர். பிரிந்தவர்கள் கூடுவது காலத்தின் கட்டாயம்! இவ்வாறு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+