அமித் ஷா நீட்டிய பேப்பர்.. உள்ளே பார்த்தால்.. சீமான் பெயரா? ஒரு நிமிடம் ஸ்டன் ஆன எடப்பாடி!
சென்னை: டெல்லியில் நேற்று முதல்நாள் இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதில் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடியிடம் அமித் ஷா கொடுத்த பேப்பர் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளதாம்.
அமித் ஷா எடப்பாடியிடம் மிகவும் சகஜமாக பேசி உள்ளார். கூட்டணி உடைந்த கோபம், அதிமுக - பாஜக இடையே உள்ள மோதலை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசி உள்ளார். ஆனால் அதே சமயம் சில விஷயங்களை அடித்து சொல்லி இருக்கிறார்.
1. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது.
2. தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம்.

3. போனது போகட்டும்.. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதெல்லாம் நமது கூட்டணியில் எதிராக வரக்கூடாது. நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது வெல்வது.
4. நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள்.
5. அதற்கு ஏற்றபடி கூட்டணி அமைக்க வேண்டும் என்று இதில் பேசியதாக தெரிகிறது. இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை கூட்டணியில் பெற உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.
6. அதாவது கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது என்கிறார்கள்.
7. இதில்தான் முக்கியமாக அமித் ஷா பேப்பர் ஒன்றை எடப்பாடி கையில் கொடுத்துள்ளார். அதில் தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் இருந்துள்ளது. இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் இருந்துள்ளது. இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா கூறி உள்ளாராம்.
8. இதில் சீமான் பெயரை பார்த்து எடப்பாடி கொஞ்சம் ஸ்டன் ஆகிவிட்டாராம். சீமான் நம்ம கூட்டணிக்கு வருவாரா என்பது தொடர்பாக நேற்றில் இருந்தே எடப்பாடி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறாராம்.
-
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications