ஜனகராஜின் முகத்தையே மாற்றி விட்ட அந்த கார் சம்பவம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறாரா நடிகர்? இதுதான் நிஜம்
சென்னை: 80 மற்றும் 90-களில் ஜனகராஜ் இல்லாத படங்களே இல்லை, அவரது தனித்துவமான பேச்சு வழக்கு பலருக்கும் பிடித்தமானது.. அவர் அமெரிக்காவில் இருக்கிறார், மனநிலை சரியில்லாமல் சுற்றுகிறார், ஆட்டோ ஓட்டுகிறார், அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் அளிக்கப்படுகிறது போன்ற வதந்திகள் பரவியது.. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது என்று விளக்கம் தந்துள்ளார் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, வசனங்கள் பேசி மட்டும் சிரிக்க வைக்காமல், முக பாவனைகள் மூலமே ஜனகராஜ் சிறப்பாகக் காமெடி செய்வார் ஜனகராஜ் பாராட்டை பெற்றார்.. அக்னி நட்சத்திரம் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா" என்ற வசனம் இன்றும் மிகவும் பிரபலம்

ரஜினிகாந்த்
அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் பாம்பு பிடிக்கச் சென்று குஷ்புவைச் சந்திக்கும் கதையை ஜனகராஜிடம் சொல்வார்.. அப்போது ஜனகராஜ் கொடுக்கும் ரியாக்ஷன்களும், "உனக்கு உடம்பெல்லாம் மச்சம் அண்ணாமலை..." என்று அவர் சொல்லும் வசனமும் அன்று மிகப்பெரிய ஹிட்டானது...
ஜனகராஜின் குரலும், அவரது நடிப்பு முறையும் மிகவும் வித்தியாசமானது. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. அந்த காலகட்டத்தில் ரஜினியின் படங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக அவர் இருந்தார் ஜனகராஜ்.
ஜனகராஜ் பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்க மாட்டார். படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் வரை பேசி முடித்த பிறகுதான் காசு கேட்பார். இதனால் பல படங்களில் அவருக்குச் சம்பளம் வராமலேயே போயிருக்கிறது என்று அவரது இலகுவான மனம் பற்றிப் புகழப்படுகிறது.
ஜனகராஜ் விபத்து
அந்த காலகட்டத்தில் ஏசி கார்கள் அதிகம் கிடையாது.. ஒருநாள் ஜன்னல் ஓரம் காரில் உட்கார்ந்திருந்தார்.. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கல் வந்து பலமாகத் தாக்கியது. ரத்தம் அதிகமாகக் கொட்டியதால் அவர் போட்டிருந்த வெள்ளை வேட்டி, ஷர்ட் எல்லாமே ரத்தமாகி அவர் மயக்கமாகிவிட்டார்.. உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
மறுநாள் காலை கண்விழித்தபோது அவரது மூக்கில் டியூப் போடப்பட்டிருந்தது. அங்கிருந்த நர்ஸ் அவரிடம் "கண்ணாடியில் முகத்தைப் பார்க்க வேண்டாம்" என்று கூறியுள்ளார். நர்ஸ் சென்ற பிறகு, டியூப்களைப் பிடுங்கிவிட்டுச் சென்று கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்த ஜனகராஜ், முகம் ஒரு பக்கம் பயங்கரமாக வீங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வலது கண் சிறியது
கல் தாக்கிய வேகத்தில் அவரது முக நரம்புகள் பாதிக்கப்பட்டு அவருக்கு முகவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அதற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்திலும் அவரது வலது கண் சிறியதாகவும், முகம் ஒரு பக்கமாக இழுத்தவாறும் இருந்தது..
இந்த விபத்துக்கு பிறகு ஓராண்டு காலம் சிகிச்சையில் இருந்த இவருக்கு, மீண்டும் பாரதிராஜா 'காதல் ஓவியம்' படத்தில் வாய்ப்பளித்துத் திரைவாழ்வை மீட்டுக்கொடுத்தார்.. அப்போது முதல் ஜனகராஜின் வலது கண் சிறியதாகவும், அவர் பேசும்போது முகம் ஒரு பக்கமாக இழுத்தவாறும் இருக்கும்,
ஜனகராஜ் - ஆட்டோ ஓட்டுநர்
80 மற்றும் 90-களில் ஜனகராஜ் இல்லாத படங்களே இல்லை, அவரது தனித்துவமான பேச்சு வழக்கு பலருக்கும் பிடித்தமானது.. அவர் அமெரிக்காவில் இருக்கிறார், மனநிலை சரியில்லாமல் சுற்றுகிறார், ஆட்டோ ஓட்டுகிறார், அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் அளிக்கப்படுகிறது போன்ற வதந்திகள் பரவியது..
'தாத்தா' என்ற குறும்படத்தில் அவர் ஆட்டோ ஓட்டுநராக நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான், அவர் நிஜமாகவே ஆட்டோ ஓட்டுகிறார் என்ற வதந்திக்குக் காரணம் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications