ராமதாஸ் சொத்துக்களை திருடிவிட்டாரா அன்புமணி? போட்டுடைத்த அக்கா ஸ்ரீகாந்தி! தைலாபுரம் தோட்டம் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தி சங்கமித்ரா, தர்மபுரி மற்றும் பென்னாகரம் தொகுதிகளில் தனது அம்மா சவுமியாவிற்காக பிரச்சாரம் செய்தபோது, ஜி.கே.மணி தங்களது தாத்தாவைத் தங்களிடமிருந்து பிரித்துவிட்டதாகக் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியிருந்தார்.. இந்நிலையில், அன்புமணி மீது அவரது சகோதரி வைத்துள்ள குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை அரசியல் களத்தில் உண்டுபண்ணி வருகிறது.

நேற்றைய தினம் அன்புமணி மகள் சங்கமித்ரா தன்னுடைய பிரச்சாரத்தின்போது, "தைலாபுரம் தோட்டத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். எங்களை பிரித்து, 87 வயதான தாத்தாவை தனது மகனின் வெற்றிக்காகக் ஜி.கே.மணி கட்டாயப்படுத்திப் பிரசாரத்திற்கு அழைத்து செல்கிறார். ஆனால் என்னுடைய 5 மாதக் குழந்தையைக் கூட தாத்தா இன்னும் பார்க்கவில்லை.

Ramadoss Property Dispute PMK family feud Anbumani vs Sreekanthi Tamil Nadu Assembly Election 2026 Tamil Nadu election 2026 2026 2026

அழுதுட்டே பேசிய சங்கமித்ரா

ஆம்புலன்சில் சென்றபோது தாத்தா அழுது கொண்டே பேசினார்.. துரோகம் செய்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனைத் தோற்கடிக்க வேண்டும் என மக்களிடம் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்திருந்தார் சங்கமித்ரா.

இதற்குப் பதிலளித்த ஜி.கே.மணி, இது முழுக்க முழுக்கப் பொய்யான செய்தி என்றும், கிராமத்து மக்களிடம் கண்ணீர் விட்டு அன்புமணி மகள்கள் நாடகமாடுவதாகவும், தாத்தாவை நேரில் வந்து பார்க்க தான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்..

அன்புமணி சொத்து, கட்சியை திருடிவிட்டார்

இந்நிலையில், ராமதாஸின் மகளும் அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி அதிரடியானப் புகார்களை முன்வைத்துள்ளார்.. பிரபல நாளிதழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், "அன்புமணி தான் முதல் துரோகி, என் அப்பாவின் சொத்து, கட்சி என அனைத்தையும் திருடிவிட்டார். நிறைய சொல்வதற்கு உள்ளது. குடும்பத்தை பற்றி நிறைய சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். இவர் 2 நாள் மருத்துவமனையில் இருந்தார். அவரை என் உடன் பிறந்தவர் வந்து பார்க்கவில்லை. அவர் பிறந்தநாளுக்குகூட வரவில்லை.

நாங்கள் அப்பாவை பிரசாரத்திற்கு போகக்கூடாது என்று தான் சொன்னோம். அதையும் மீறி சென்றார். அங்குதான் மயக்கம்போட்டு ஆம்புலன்சில் ஏற்றி சென்றோம். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். ஆனால் இதுவரை அன்புமணி வந்து பார்க்கவில்லை. அவருக்கு எதாவது ஒன்னு ஆச்சுன்னா உங்களை தொலைத்துவிடுவேன். யாரு நீங்கள் எல்லாம்.

கேவலமா பேசிட்டாரு

அவரின் உழைப்பில் வளர்ந்தவர்கள் நீங்கள் எல்லோரும். அப்பா மீது எந்தவித குற்றச்சாட்டும் சொல்லமுடியாது. ஒரு அக்கா என்றுகூட பாராமல் என்னை கேவலமாக பேசுகிறார்கள். என் அப்பாவை இந்த வயதில் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் யாரும் அதை செய்யவில்லை.

அன்புமணியை நினைத்து நினைத்துதான் அவரின் உடல்நிலை மோசமானது. இதற்கெல்லாம் அன்புமணிதான் காரணம். அப்பாவிற்கு பிறகு அவர் கட்சியை எடுத்து நடத்தலாமே ஏன் இவ்வளவு அலைச்சல். பேரப்பிள்ளையை கூட அப்பாவிற்கு காட்டவில்லை. இந்த வயதில் தந்தை கிட்ட போய் கட்சியை பிடுங்குவார்களா, வேண்டுமென்றால் தனி கட்சி அவர் ஆரம்பித்திருக்க வேண்டும். ஒரு தந்தைக்கு நல்ல பிள்ளையாக இல்லாத அவர் மக்களுக்கு நல்ல தலைவராக எப்படி இருப்பார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளதாக அந்த நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

வன்னியர் ஓட்டு யாருக்கு போகும்?

மொத்தத்தில் பாமகவில் குடும்பச் சண்டை என்பது மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ளது.. இது தேர்தல் களத்திலும் பெரிய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

வன்னியர் சமூக வாக்குகள் யாருக்குப் போய் சேரும் என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க, இதெல்லாம் அரசியல் பதவிக்காக நடக்கிறதா அல்லது சொத்துப் பிரச்சினையால் நடக்கிறதா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.. இதனால் பாமக தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்..

அதுமட்டுமல்ல, ஒரு கட்சியின் அடித்தளமாக விளங்கும் குடும்பத்திலேயே இத்தகைய பிளவுகள் ஏற்படுவது அக்கட்சியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும்.

குறிப்பாக தேர்தல் நேரத்தில் வாரிசுகளுக்கு இடையே பொதுவெளியில் அரங்கேறும் இத்தகைய மோதல்கள், எதிரணியினருக்குச் சாதகமான சூழலை உருவாக்கித் தரும்.. உணர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளைத் தாண்டி, கட்சியின் எதிர்காலம் மற்றும் சமூக நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.. எதுவாக இருந்தாலும், இறுதியான தீர்ப்பை மக்கள் வரும் தேர்தலில் தங்கள் வாக்குகள் மூலம் பதிவு செய்வார்கள் என்பது மட்டும் உறுதி.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+