தென் சென்னையில் களமிறங்க பிளான்.. காயத்ரி போட்ட திட்டம்? போன் போட்ட அண்ணாமலை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் காயத்ரி ரகுராம். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை தனக்கு போன் செய்ததாக காயத்ரி ரகுராம் பேட்டி அளித்துள்ளார். இந்த போன் உரையாடலில் என்ன நடந்தது என்று அவர் விளக்கமாக குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று கடந்த சில நாட்களாக காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். முக்கியமாக காசியில் நடந்த தமிழ் சங்க கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை, புறக்கணித்துவிட்டனர் என்று ஆதங்கத்தை காயத்ரி ரகுராம் வெளிப்படுத்தி இருந்தார்.

இதையடுத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் ட்விட்டரில் காயத்ரி ரகுராமிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தலைவர் சொல்வதை கேட்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் இப்படி எல்லாம் பேச கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

புகார்

புகார்

சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் தனக்கு எதிராக டிரெண்ட் செய்கிறார். கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள். எங்களுக்கு எதிராக பெரிய வார் ரூம் செயல்படுகிறது. இதில் எங்களுக்கு எதிராக ட்விட் போடப்படுகிறது. இதை நான் தட்டி கேட்பேன் என்று காயத்ரி குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய மோதலாக இணையத்தில் வெடித்தது. இந்த நிலையில்தான் நேற்று திருச்சி சூர்யா பாஜக நிர்வாகி டெய்சி சரண் என்ற பெண்ணிடம் பேசுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 காயத்ரி ஆடியோ

காயத்ரி ஆடியோ

இதையடுத்து திருச்சி சிவா பேசுவதாக வெளியான ஆடியோ குறித்தும் காயத்ரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதில், பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜால்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள் வார் ரூம், செல்வா & கோ.
புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜால்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவருக்கும் தாழ்மையான வேண்டுகோள், என்று குறிப்பிட்டார்.

நீக்கம்

நீக்கம்

நேற்று இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பின் ட்விட்டரில் காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில் அண்ணாமலை தனக்கு போன் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின் அண்ணாமலை எனக்கு போன் செய்தார். அண்ணாமலை என்னிடம் இதை பற்றி பேசினார். ஏன் என்னிடம் நீங்கள் புகார் தரவில்லை என்று கேட்டார். நீங்கள் புகார் கொடுத்து இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து இருக்கிறேனா என்று கேட்டார். பதிலுக்கு நான் பெப்சி சிவா விவகாரத்தை புகார் கொடுத்தேன். பாஜகவின் கலைப்பிரிவில் நடக்கும் விவகாரங்கள் பற்றி புகார் கொடுத்தேன்.

தென் சென்னை

தென் சென்னை

அப்போதே நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, ஆனால் என்னுடைய பதவிதான் பறிக்கப்பட்டது என்று கூறினேன். இதற்கு பதில் சொன்ன அவர்.. நீங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டீர்கள், என்று கூறினார். நான் அதை ஏற்றுக்கொண்டேன், என்று காயத்ரி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தென் சென்னை தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட காயத்ரி விரும்பியதாக செய்திகள் வந்தன. இதனால்தான் அவர் பாஜகவில் ஓரம் கட்டப்படுகிறார் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த காயத்ரி.. நான் போட்டியிடலாம்.. போட்டியிடாமல் போகலாம்.. அவங்க ஏன் என்னை ஒதுக்குகிறார்கள் என்று தெரியவில்லை, என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+