யாருங்க இது? அதுவும் அண்ணாமலை பக்கத்துல? ஒரே நேரத்தில், ஒரே இடத்தில்.. இது எப்போ? திருச்சி திருப்பம்
சென்னை: அதிமுக, பாஜக என இரண்டு கட்சிகளுமே தங்கள் கூட்டணியை உறுதி செய்யவில்லை.. அறிவிக்கவுமில்லை.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு பரபரப்பான சம்பவம் நம்ம திருச்சி ஏர்போர்ட்டில் நடந்துள்ளது.. என்ன தெரியுமா?
தேர்தல் நெருங்குகிறது.. இப்போதைக்கு கூட்டணியில் பலமாகவும், வேகமாகவும் உள்ளது திமுக மட்டும்தான்.. மற்றபடி, அதிமுக, பாஜகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இவர்களுடன் ஏற்கனவே கூட்டணியிலிருந்த ஜிகே வாசன் போன்ற தலைவர்கள், அதிமுக, பாஜக என யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி உள்ளனர்...

இதில், பாமக, தேமுதிகவும், அதிமுக, பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.. 2 கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்ததால், தங்களது தொகுதி தொடர்பான எதிர்பார்ப்பை பாமக, தேமுதிக அதிகரித்துவிட்டது.. அதாவது பாமக 12 தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக தெரிகிறது.
தமிழகம்: ஆனால், தேமுதிகவோ, தேமுதிக 14 + 1 என்று அறிவித்து, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பகீரை கிளப்பிவிட்டது. ஆனால், தேமுதிக இப்படி அறிவித்த கையோடு, அதிமுக மற்றும் பாஜக, தங்களால் இவ்வளவு தொகுதி தரமுடியாது என்று சொல்லிவிட்டதாம். எனினும், தேமுதிகவிற்கு 4 சீட் வரை அதிமுக தருவதாக முடிவு செய்துள்ளது..
சீட் விவகாரத்தில் வித்தியாசம் இருந்தாலும், மாநிலங்களவை சீட் தருவதற்கு சான்ஸே இல்லை என்று அதிமுக சொல்லிவிட்டதாம். அதுமட்டுமல்ல, 14+1 என்று பிரேமலதா சொன்னதுமே, அந்த கட்சியுடன் பேசுவதையே நிறுத்துங்கள் என்று மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி 3 பேரையும் அழைத்து, எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டாராம்.
தூது: இதனை தாமதமாக உணர்ந்த பிரேமலதா, "14 சீட் என்பது கட்சியினர் சொன்ன யோசனை... ஆனால், இறுதி முடிவை எடுக்க எனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்யசபா கேட்பது எங்கள் உரிமை" என்று சொன்னதுடன், அதிமுக, பாஜக 2 கட்சிகளின் தலைமைக்கும் சுதீஷ் மூலம் தகவலையும் தந்தாராம் பிரேமலதா. அதாவது, "14 சீட் என்பதில் யோசிக்க வேண்டாம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுங்கள், வருகிறோம், பேசலாம்" என்பதே அந்த தகவலின் சாராம்சமாம்..
ஆனால், "ராஜ்யசபா கோரிக்கையை கைவிட்டுவிட்டால் வாருங்கள், பேசலாம். அந்த கோரிக்கையுடன் தான் வருவீர்கள் என்றால், வர வேண்டாம்... ராஜ்யசபா சீட் கேட்பது உங்கள் உரிமை என்பதெல்லாம் எப்படி என்பது எங்களுக்குப் புரியவில்லை" என்று அதிமுக, பாஜக 2 கட்சிகளுமே கைகளை விரித்துவிட்டனவாம்.
தேமுதிக: அதற்கு பிறகு, பிரேமலதாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். ஒருவேளை ராஜ்யசபா கோரிக்கையை கைவிடும் பட்சத்தில், அதிமுக, பாஜக 2 கட்சிகளும் தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கவே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரபரத்தன.
இப்படிப்பட்ட சூழலில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தேமுதிக நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. முக்கியமாக, மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளாக தெரிகிறது. அதுவும் இல்லாமல், வரும் 27, 28-ந்தேதிகளில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் வரப்போகிறார். எனவே, அந்த நேரத்தில், தேர்தல் கூட்டணி இறுதி செய்யவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
விமானம்: இப்படி யூகமான தகவல்கள் ஒருபக்கம் கிளம்பி கொண்டிருந்தால், இன்னொரு பக்கம், சுதீஷூம் அண்ணாமலையும் ஒன்றாக விமானத்தில் பேசிக் கொண்டே வந்ததாக இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.
அதாவது, சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று புதன்கிழமை காலை 7.10 மணிக்கு ஒரு விமானம் வந்துள்ளது.. இந்த தேமுதிக மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ் வந்துள்ளார்.. ரெகுலர் லாஞ்ச் வழியாக சுதீஷ் வெளியே வந்துள்ளார்.. சுதீஷ் வந்த அடுத்த சில மணித்துளிகளிலேயே அண்ணாமலையும் அதே விஐபி லாஞ்ச் வழியாக வெளியே வந்தாராம்.
சுதீஷ்: சுதீஷை வரவேற்க தேமுதிக நிர்வாகிகளும், அண்ணாமலையை வரவேற்க பாஜக நிர்வாகிகளும் ஏர்போர்ட்டில் தங்கள் தொண்டர்களுடன் காத்திருந்தனர். இவர்கள் 2 பேரும் ஒன்றாக வந்து நின்றதுமே, வரவேற்க வந்திருந்த 2 கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டதாம்.
ஒரே விமானத்தில் பயணம் செய்தாலும், பக்கத்து பக்கத்து சீட்டில் உட்காரவில்லையாம்.. சுதீஷ் முன்பக்க சீட்டில் உட்கார்ந்திருந்தாராம்.. அண்ணாமலை பின்பக்க சீட்டில் உட்கார்ந்திருந்தாராம்.. எனினும், 2 பேரும் அநேகமாக கூட்டணி குறித்தும் பேசியிருக்கலாம் என்கிறார்கள்.. அதேசமயம், 2 பேரும் சந்தித்ததற்கான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை
குழப்பம்: ஆனால், ஒரே விமானத்தில் 2 கட்சிகளின் தலைவர்களும் பயணம் செய்ததுதான் தற்போது, தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. ஏர்போர்ட்டில் தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற அண்ணாமலை கரூருக்கு புறப்பட்டு சென்றுவிட்டாராம். சுதீஷ் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுவிட்டாராம். 2 பேரையும் ஆளுக்கு ஒரு பக்கம் வழியனுப்பி வைத்த தொண்டர்கள், ஒருவித குழப்பத்துடனேயே அங்கிருந்து கலைந்து சென்றார்களாம்...!!
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications