பச்சை இங்க்கில் கையெழுத்து போட்டால்? கருணாநிதியை "கலைஞர்"னு சொல்றாரே அண்ணாமலை? சீறிய ராஜேஸ்வரி பிரியா
சென்னை: கருணாநிதி என்று பேசிய உங்கள் வாய் "கலைஞர்" என்று பேச தொடங்கியதை எந்த நேர்மையில் சேர்ப்பீர்கள்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, ராஜேஸ்வரி பிரியா நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார். இதையடுத்து, அதிமுக - பாஜக இடையேயான அதிருப்திகள் தொடர்ந்து வலுத்து வருகிறது..
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இவர்கள் 2 பேருக்கும் இடையிலான வார்த்தை போர்கள் பல மாதங்களாகவே நீடித்து வருகிறது..

ஜெ. ஜெயலலிதா: பேரரறிஞர் அண்ணா முதல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை "இந்துத்துவத் தலைவர்" என்று அண்ணாமலை கூறியிருந்தது வரை, மிகப்பெரிய அதிர்வலையை அதிமுகவுக்குள் ஏற்படுத்திவிட்டது. இதனால் கொதிப்படைந்த தொண்டர்கள், பாஜகவுக்கு கடுமையான எதிர்வினையாற்றினார்கள்.
எனினும், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது, இரு தரப்பிலுமே அதிருப்திகள் வெடித்தன.. "ஜூன் 4-க்கு பிறகு அதிமுக எங்கே இருக்கப் போகிறது? அதிமுக, பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்றும் பார்ப்போம். எந்தக் கட்சி மக்கள் மனதை பிடித்திருக்கிறது? எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது? என்பதையும் பார்ப்பீர்கள். விளக்கு அணையும்போது பிரகாசமாகத்தான் எரியும்" என்று அதிமுகவை அட்டாக் செய்திருந்தார் அண்ணாமலை
அண்ணாமலை: அதுமட்டுமல்ல 4 நாட்களுக்கு முன்புகூட அண்ணாமலை பேசும்போது, "2026 சட்டசபை தேர்தலில், அதிமுக ஆட்சிக்கு வரமுடியாது.. 4வது இடம்கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. அதிமுகவை இப்போது தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை காட்டமாக தந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றுகூட மூத்த தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிட பேசும்போது, "அதிமுகவை அழிக்க, கருணாநிதியின் முப்பாட்டனாலும் முடியவில்லை. அப்பாவாலும் முடியவில்லை... எனவே அண்ணாமலையின் அப்பாவாலும் முடியாது.. அவரது அப்பாவின் முப்பாட்டனாலும் முடியாது. அதிமுக தொட்டுப் பார்த்தால் அவர்கள் நிச்சயம் கெட்டுப் போவார்கள்" என்று சீறியிருந்தார்.
டாக்டர் சரவணன்: அதுமட்டுமல்ல, அண்ணாமலை மீது புகார் தரப்போவதாக டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.. "தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மட்டுமே இடம் உள்ளது. பாஜக என்பது மழை பெய்தவுடன் முளைக்கும் காளான் போன்றது. அண்ணாமலை பச்சை பச்சையாய் வீடியோ எடுத்தவர். பாஜக என்பது வீடியோ கட்சி. அண்ணாமலை அரசியல் வியாபாரி. அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும், இல்லையெனில் நாக்கு அழுகி விடும்" என்றார்.
ராஜேஸ்வரி பிரியா: இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, ராஜேஸ்வரி பிரியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதிமுக ஆதரவாளரும், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவருமான ராஜேஸ்வரி பிரியா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை தன்னுடைய ட்வீட்டிலும் பதிவிட்டுள்ளார். அதில், உள்ளதாவது:
"அண்ணாமலை அவர்கள் பச்சை இங்கில் கையெழுத்து போட்டதனால் பெரிய ஆள் என்று தன்னை தானே புகழ்ந்து கொண்டு பேசுவதோடு மட்டுமல்லாமல், 4 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் நலம் பெற பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி k பழனிசாமி அவர்களை அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருப்பது நீங்கள் இருந்த ஐபிஎஸ் பதவிக்கே இழுக்கு.
கருணாநிதி: கருணாநிதி என்று பேசிய உங்கள் வாய் "கலைஞர்" என்று பேச தொடங்கியதை எந்த நேர்மையில் சேர்ப்பீர்கள்? வாயடக்கமும் மரியாதையும் என்னவென்று கற்றுகொண்டு அரசியலுக்குள் நீங்கள் வந்திருக்கலாம். இயலாமை மட்டுமே தரம் தாழ்த்தி பிறரை பேச வைக்கும். திறனை வளர்த்து கொள்வதை விட்டுவிட்டு திமிரை வளர்த்து கொள்ள வேண்டாம்" பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டினை, அண்ணாமலையையும், எடப்பாடி பழனிசாமியையும் டேக் செய்துள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
எனினும் பாஜக அசரவில்லை.. "அண்ணாமலையை பார்த்து அதிமுகவினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில துணை தலைவா் கரு.நாகராஜன் கூறி உள்ளார். ஜெயலலிதா வழியில் நடப்பது பாஜக தான் என்றும் கூறி அறிக்கையையும் இன்று வெளியிட்டுள்ளார்.
பரபரப்பு: இப்படி, நாளுக்கு நாள் அதிமுக - பாஜக இடையே கடுமையான வார்த்தை போர் வலுத்து வரும் நிலையில், பதற்றமும், பரபரப்பும் இரு தரப்பு தொண்டர்களிடம் நிலவி கொண்டிருக்கிறது.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications