5 + 10 + 25 சீட்.. "மிச்சம்" அவங்களுக்கு.. டோட்டலா மாறுதே.. எடப்பாடியை அசரடித்த பாஜக.. அப்ப திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் அதிகரித்தபடியே உள்ளன.. இதை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக கவனித்து வருகின்றன.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே பலம் வாய்ந்து காணப்படுகிறது.. இதில் இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்குள் இணையலாம் என்கிறார்கள். ஆனால், அது எந்த கட்சி என்று இதுவரை தெரியவில்லை.

அதேபோல, மெகா கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன.. இன்னும் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை...
புது கூட்டணி: இதற்கு நடுவில், அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகி உள்ளது.. மேலிடத்தில் இருந்து மட்டுமே, உறுதி வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, மாநில அளவில் வெளிப்படையாக யாரும் பேசவில்லை.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி + அண்ணாமலை இருவரின் நிலைப்பாடும், தற்சமயம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை..

சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேர்தல் வியூகம் தொடர்பாக ஒரு தகவல் வட்டமடித்தது.. அதாவது, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் சரிபாதியாக 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும், மீதமுள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், அப்படி ஒதுக்கப்படும் 20 தொகுதிகளை, தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என தமிழக பாஜக தலைவர்கள், அதிமுகவிடம் வலியுறுத்தியிருக்கிறார்களாம்.

Did annamalai says about aiadmk alliance and What are the edapadi palanisamy, bjps election strategies

20 - 20 சாத்தியமா: அந்த 20 தொகுதிகளில், 13 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. மற்ற 7 தொகுதிகளை, ஓபிஎஸ் அணி + அமமுக டிடிவி தினகரன், தமாகா ஜிகே வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் போன்றோருக்குதான் அந்த தொகுதிகளை வழங்க பாஜக கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.

இதில், ஓபிஎஸ் அணிக்கு மட்டும் 2 இடங்கள் கொடுக்க போவதாக பேசி வருகிறார்களாம்.. அதில் ஒரு தொகுதியில் ரவீந்திரநாத்தை நிறுத்தவும் ஏற்பாடுகள் நடப்பதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்பட கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் அனைத்தையும் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன.

5 எம்பிக்கள்: இந்த தகவல்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளதா என்பது தெரியவில்லை.. ஆனால், தமிழக பாஜகவின் வியூகம் மட்டும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது.. அந்தவகையில் அண்ணாமலை ஒரு கணக்கை போட்டுள்ளாராம்.. அதாவது, தமிழகத்தில் இருந்து பாஜக 5 எம்பிக்களுக்கும், கூட்டணி கட்சிகள் 10 எம்பிக்களும் வெற்றி பெற்று டெல்லி செல்ல வேண்டும் என்பதே அந்த கணக்காக உள்ளதாம்..

இந்த கணக்கு குறித்து டெல்லிக்கு ஒரு விளக்கத்தையும் தந்திருக்கிறார் அண்ணாமலை.. அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பலவீனமாக அதிமுக உள்ள நிலையில், பாஜக தலைமையில் பாமக உள்பட சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க வேண்டும்.. அப்படி கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும்... தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும்.. இதில் பாஜக 5 தொகுதிகளில் நிச்சயம் ஜெயிக்கும் என்கிறாராம் அண்ணாமலை.

ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தருவார்கள். அதில் ஒன்று அல்லது 2 தொகுதிகளில்தான் பாஜக வெற்றி பெறும் என்றாராம்..

அசைன்மென்ட்: இதைக்கேட்ட டெல்லி மேலிடமோ, "திமுக வலுவான அணியாக இருப்பதால் இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே பலம் சேர்க்கும்... 2026-ல் தமிழக அரசியல் களம் என்பது திமுக - பாஜக இடையேதான் இருக்கும் என்று உறுதியாக சொன்னார்களாம்.. அதுமட்டுமல்ல, பாஜக போட்டியிட விரும்பும் தொகுதியில் பணிகளை செய்யுங்கள் என்றும் அண்ணாமலைக்கு அசைன்மென்ட் தந்துள்ளதாம் மேலிடம்..

இதை உறுதிப்படுத்தும் வகையில்தான், "எங்கள் கூட்டணியில் பாஜகவும் இருக்கும். இது உறுதியான கூட்டணி இதில் எந்த குழப்பமும் வேண்டாம்" என்று மூத்த தலைவர் நத்தம் விசுவநாதனும் சொன்னாராம்..

ப்ளான்கள்: இதனிடையே, டெல்லியில் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் தரப்பில் கேட்டதற்கு, "நான் பல விஷயங்களுக்காக டெல்லி செல்வேன். அதையெல்லாம் பொது வெளியில் சொல்ல முடியாது. யூகங்களுக்கு பதில் சொல்லவும் விரும்பவில்லை" என்று பதிலளித்திருந்தார் அண்ணாமலை..

பொதுவெளியில் வியூகங்களை தெரிவிக்காவிட்டாலும், அண்ணாமலையின் ஒவ்வொரு பிளான்களும், கட்சிக்கு உரமாகி கொண்டேயிருக்கிறது என்று பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பாஜகவினர்..!

இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, டெல்லி சென்று எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.. அப்போது, அங்கு அண்ணாமலையும் இருந்ததாக தெரிகிறது.. , "தமிழகத்தில் அதிமுக - பாஜக இரு தரப்பிலுமே சுமூகமான மனப்போக்குடன் நடந்து கொள்வோம்" என்று எடப்பாடி + அண்ணாமலை சார்பில் மேலிடத்துக்கு அப்போது உறுதியும் அளிக்கப்பட்டதாம்.

நேருக்கு நேர்: ஆனால், அதற்கு பிறகு, எடப்பாடி தரப்பும், அண்ணாமலை தரப்பும் இதுவரை நேருக்கு நேர் வெளிப்படையாக சந்தித்து கொள்ளவில்லை.. ஒருவரையொருவர் பற்றி பேட்டிகளையும் தந்து கொள்ளவில்லை.. குறைந்தபட்சம் கூட்டணி பற்றியும் பேட்டிகளை தரவில்லை.. கர்நாடக தேர்தல் வந்துவிட்டதால், அண்ணாமலை படுபிஸியாக இருந்ததால், இதற்கான சாத்தியங்கள் அமையவில்லை. அதற்கு பிறகும்கூட அமையாமல் உள்ளது.

அப்படியானால் மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லையா? என்று தெரியவில்லை.. ஆனால், அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும்.. எனினும், வரும் தேர்தலில் யார் தலைமையில், கூட்டணி அமைய போகிறது? எடப்பாடி பழனிசாமி சொன்ன அந்த மெகா கூட்டணி யார் யார் என்பதெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+