"கிரேட் சேஞ்ச்".. கண்சிவந்த பாஜக.. அவருக்கு செம "குட்டு" போல.. எடப்பாடியா காரணம்.. பிரியன் ஒரே போடு
மூத்த பத்திரிகையாளர் பிரியன் அதிமுக பாஜக கூட்டணி குறித்து நமக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மேலிடம் குட்டு வைத்திருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.. என்ன காரணம்?
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.
திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருவதால், அந்தவகையில் திமுக வலுவாகவே உள்ளது.

கிலி கலக்கம்
சில தினங்களுக்கு முன்பு, நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, மெகா கூட்டணி அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்றார்.. எந்த கட்சிகளை மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடி இப்படி பேசினார் என்பதே பலரது ஆர்வமாக எழுந்து வருகிறது.. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவரிடம், தமிழக அரசியல் மற்றும் கூட்டணி சூழல் குறித்து கேள்விகளை முன்வைத்தோம்.. அதற்கு நம்மிடம் ப்ரியன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

ஜானகி டீம்
"பாஜகவை பொறுத்தவரை ஒன்றுட்ட அதிமுகவை விரும்புகிறது.. அதற்காகவே எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் இணைய வேண்டும் என்று நினைக்கிறது.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியிடம் நிறைய ஆதரவாளர்கள் உள்ளார்கள் என்பதை மட்டுமே வைத்து எந்த முடிவும் செய்ய முடியாது.. உதாரணமாக 72-ல் எம்ஜிஆருடன் வெறும் 7 எம்எல்ஏக்கள்தான் சென்றார்கள்.. ஆனால் 77-ல் மக்கள் யாருக்கு ஆதரவு தந்தார்கள் என்பதை பார்க்க வேண்டும்.. அதேபோல, ஜெயலலிதா + ஜானகி அணி பிரிந்தபோது, 99 எம்எல்ஏக்கள் ஜானகி பக்கம் இருந்தார்கள்.. ஆனால், ஆட்சி யார் பக்கம் போனது, தொண்டர்கள் யார் பக்கம் போனார்கள் என்பதை நாம் பார்த்தோம்..

சிம்பாலிக்
அதனால்தான் சொல்கிறேன், எடப்பாடிக்கு மெஜாரிட்டி ஆதரவு என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.. வெறும் 3 சதவிகிதத்தில் ஆட்சியை இழந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது அதிமுக தொண்டர்களுக்கே அதிர்ச்சிதான்.. காரணம், இந்த தேர்தல்தான் தொண்டர்களுக்கு பதவியை தரக்கூடியது.. தனித்தனியாக சின்னத்தில், நின்று தேர்தலை இவர்கள் சந்தித்தால்தான், எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது தெரியவரும்.. அடுத்தடுத்த தோல்வியால் தொண்டர்களும் சோர்வை நோக்கி சென்றுவிட்டனர்.. ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் ஒற்றுமையாக இருந்தால் மூலமே பெற முடியும்.. இதைதான் பாஜக நினைக்கிறது.

சப்போர்ட் புரிதல்கள்
ஒருவேளை எடப்பாடி இணக்கமான போக்கிற்கு உடன்படவில்லையானால், பாஜக அதற்கும் அசராது.. தன் கட்சியை மேலும் வளர்க்க தொடங்கிவிட்டார்கள்-.. அதனால்தான், திமுகவுக்கு எதிரான போராட்டம், இந்துத்துவா என பிரச்சனைகளை கையில் எடுத்து வருகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் நிறைய புரிதல்கள் உள்ளன.. எதற்காக எடப்பாடியை அண்ணாமலை சப்போர்ட் செய்கிறார் என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இருவருமே ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கிறார்கள்.. அதனால்தான், எடப்பாடி மெகா கூட்டணி என்று பேசியதற்கு அண்ணாமலையும் ஆதரவு தந்து பேசினார்..

சப்போர்ட்
ஆனால், எடப்பாடிக்கு அண்ணாமலை பதில் சொன்னதற்கு, மேலிடத்தில் இருந்து செக் வைத்திருக்கிறார்கள்.. "நீங்க ஏன் அப்படி எடப்பாடிக்கு சப்போர்ட் செய்து பேசினீங்க? அதிமுகதான் இப்போது பிளவில் உள்ளதே, அதை ஒன்றுபடுத்ததானே முயற்சி எடுத்து வருகிறோமே.. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளபோது, அதிக சீட்களை கேட்டு பெற முயற்சித்தும் வருகிறோம்.. 2024 பிப்ரவரி மாதம் என்ன சூழல் உள்ளது என்று யாருக்குமே தெரியாதபோது, எதற்காக உடனடியாக பதில் சொல்ல வேண்டும், என்று அண்ணாமலைக்கு மேலிடம் குட்டு வைத்திருக்கிறார்கள்..

அப்செட்
எடப்பாடி ஏன் மெகா கூட்டணி என்று சொன்னார் என்றால், தன் தொண்டர்களுக்கு நம்பிக்கையை தருவதற்காகத்தான் அப்படி நாமக்கல்லில் பேசினார்.. அதனால்தான், அண்ணாமலை எடப்பாடியை சப்போர்ட் செய்வதில், இப்போது அடக்க வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.. பொதுச்செயலாளராக வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி நினைப்பதுதான் தொண்டர்களிடம் கடுமையான அப்செட்டை ஏற்படுத்தி விட்டது.. ஜெயலலிதா வகித்த பதவியை, எடப்பாடி கையில் எடுக்க பார்ப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை. அதேபோல, ஈகோ காரணமாக, இரட்டை தலைமையை உடைத்ததை விரும்பவில்லை..

புது பஞ்சாயத்து
ஏற்கனவே சசிகலா முதுகில் குத்தி, கட்சியை விட்டு நீக்கினார்.. அதையும் தொண்டர்கள் விரும்பல.. தினகரனையும் வெளியேற்றிவிட்டார்.. அதையும் தொண்டர்கள் விரும்பல.. அதைவிட முக்கியமாக, அதிமுக என்ற வலிமை மிக்க சக்தியை ஒன்றிணைப்பது, பிரிப்பது, பஞ்சாயத்து செய்வது இது எல்லாவற்றையும் பாஜக செய்வதைதான், தொண்டர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் மத்தியில் இந்த வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது..

தைலாபுரம்
அதேசமயம், பாஜகவை விட்டு எடப்பாடியாலும் வேறு எங்கும் சென்று கூட்டணி வைக்க முடியாது. நெருக்கமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரு டீமுக்கு தேவையாக இருக்கிறது.. வேற ஆப்ஷன்களும் இவர்களுக்கு இல்லை.. பாமக திமுகவுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.. ஆனால், திமுக இதற்கு பெரிதாக ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை.. ஒருவேளை திமுக இல்லை என்று முடிவாகிவிட்டால், அதற்கு பிறகுதான், எடப்பாடி பக்கம் ராமதாஸ் போக வாய்ப்புள்ளது என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications