"பன்னீருக்கு" போனை போட்ட ஸ்டாலின்.. "கரெக்ட்டா வந்து சேர்ந்துடுச்சு".. சபாஷ் முதல்வர்.. வியந்த வேலூர்
பன்னீர்செல்வத்துக்கு போனை போட்டு நன்றி சொல்லி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பன்னீர்செல்வத்துக்கு போனை போட்டு, நன்றி சொன்ன ஆடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம் தெரியுமா?
Recommended Video
முதல்வர் முக ஸ்டாலின் கடந்த ஜுன் மாதம் வேலூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 53.13 கோடி மதிப்பில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை துவக்கி வைத்தார்... அன்றைய தினம், வேலூர் கோட்டை வளாகத்தில் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்..

டிரைவர் பூரிப்பு
வழக்கமாக, எந்த ஒரு மாவட்டத்துக்கும் ஒரு முதல்வர் செல்கிறார் என்றால் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும்.. போக்குவரத்துகள் திருப்பிவிடப்படும்.. இதனால், ஆட்டோ ஓட்டுனர்கள் முதல் பொதுமக்கள் வரை, இன்னலுக்கும், தொந்தரவுக்கும் ஆளாவார்கள்.. ஆனால், முதல்வர் ஸ்டாலின் சென்றபோது, அப்படியான நிகழ்வுகள் எதுவுமே நடக்கவில்லை.. அவரவர் அவரவர் வேலையை வழக்கம்போல் பார்த்து கொண்டிருந்தனர்.. இதைதான் அங்குள்ள ஒரு ஆட்டோ ஓட்டுனர் பாராட்டி உள்ளார்.

லெட்டர்
அவர் பெயர் பன்னீர்செல்வம்.. முதல்வர் வேலூருக்கு வந்து சென்ற அன்றைய தினம், எந்தவிதமான போக்குவரத்து இடையூறும் இல்லாமல் தாங்கள் பணி செய்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்... இத்தனைக்கும் பன்னீர்செல்வம் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகராம்..

நிரூபிச்சிட்டீங்க
அந்த கடிதத்தில், "நீங்கள், ஆட்சி பொறுப்பேற்றபோது, எனக்கு வாக்களித்த, மற்றும் வாக்களிக்காத மக்களுக்கு நன்றியை சொன்னீர்கள்.. உங்களுக்கான நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறியிருந்தீர்கள்.. தற்போது அதனை நிரூபிக்கும் வகையில், ஆட்சி செய்யும் முதல்வருக்கு, வாக்களிக்காத எம்ஜிஆர் ரசிகனான நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.. மேலும் பல நல்ல திட்டங்கள் மூலம் தமிழகத்தை முன்னேற்ற வழியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டது" என்று பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

ஹலோ.. ஹலோ
இந்த கடிதத்தை படித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின், உடனே பன்னீர்செல்வத்துக்கு போனை போட்டு நன்றியை சொல்லி உள்ளார். "ஹலோ.. பன்னீர்செல்வங்களா.. நான் முக ஸ்டாலின் பேசறேன்" என்று முதல்வர் சொன்னதுமே, ஆமாங்கன்னா.. வணக்கம்.. சொல்லுங்கண்ணா" என்கிறார்.. உடனே முதல்வர், "உங்க கடிதத்தை படிச்சேன்.. நீங்க புரட்சி தலைவர் ரசிகர்னு சொல்லி இருக்கீங்க.. நானும் எம்ஜிஆர் ரசிகன்தான்.. எனக்கு பாராட்டு எல்லாம் சொல்லி கடிதம் எழுதியிருக்கீங்க.. உங்க பாராட்டுக்கு நன்றி சொல்லத்தான் போனை போட்டேன்.." என்றார்.

சந்தோஷம்
முதல்வர் இப்படி பேசியதுமே திக்குமுக்காடிய பன்னீர்செல்வம், ரொம்ப நன்றிங்கண்ணா.. நீங்களே லைன்ல வந்தது ரொம்ப சந்தோஷம்.. உங்க கைக்கு என் லெட்டர் கிடைக்காதுன்னு நினைச்சிட்டேன்" என்கிறார்.. அதற்கு முதல்வர், "அதெப்படி வராமல் இருக்கும்.. கரெக்ட்டா கைக்கு வந்து சேர்ந்துடுச்சு.. என்ன செய்றீங்க" என்று ஸ்டாலின் கேட்க, "ஆட்டோ ஓட்டறேண்ணா" என்கிறார் பன்னீர்செல்வம்.. உடனே முதல்வர், "எங்கே டவுனுக்குள்ளேயேவோ.. சரி தம்பி, சரி தம்பி" என்கிறார் முதல்வர்.. இந்த ஆடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications