நீங்களும் வாங்க.. ஹெலிகாப்டரில் ஏறும் முன்.. கேட்ட ராஜ்நாத்.. நோ சொன்ன ஸ்டாலின்.. என்ன நடந்தது?
சென்னை: இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான சந்திப்பில் ராஜ்நாத் சிங்கின் கோரிக்கை ஒன்றிற்கு முதல்வர் ஸ்டாலின் "நோ" சொன்னதாக கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கோட்டையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். மழை வெள்ளம் குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், மத்திய அரசிடம் மாநில அரசின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஸ்டாலின் விவரித்ததை கேட்டுக்கொண்டார் ராஜ்நாத் சிங். மத்திய அரசு நிதி உதவி அளிப்பது குறித்து ராஜ்நாத்சிங் உறுதி தந்தார்.

என்ன நடந்தது?: இந்த தகவல்கள் எல்லாம் வெளிப்படையானது. அதனை ராஜ்நாத்சிங்கே தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனைத் தாண்டி சில விசயங்கள் இந்த சந்திப்பில் நடந்திருக்கிறது. மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்த ஆலோசனை முடிந்ததும், நிதி நெருக்கடியில் தமிழக அரசு இருக்கிறது.
வெள்ள பாதிப்பு: அதனால், வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு கோரிக்கை வைக்கும் முழுத் தொகையையும் ரிலீஸ் செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் சார்பில் தலைமைச் செயலாளர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு , நிலைமை எனக்கு புரிகிறது. மத்திய குழுவினரை அனுப்பி வைக்கிறோம். அவர்களின் பரிந்துரைக்கு பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக மக்களை கைவிட மாட்டோம் என்று சொல்லியுள்ளார் ராஜ்நாத் சிங். இதில் ஹெலிகாப்டரில் ஏறும் முன் ஸ்டாலினிடம்.. ராஜ்நாத் சிங்.. நீங்களும் வாருங்கள் சேர்ந்து சேதத்தை பார்க்கலாம் என்று கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலின்.. இல்லை நான் வரவில்லை. நான் தரை வழியாகவே சென்று பார்வையிட போவதாக கூறியுள்ளாராம். வெளிப்படையாக அடித்து பேசுவது போல சொல்லாமல் நாசுக்காக.. நான் தரை வழியாகவே சோதனை செய்கிறேன் என்று முதல்வர் தரப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கூறியதாக தெரிகிறது.
மத்திய அரசு நிதி: வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண நிதி + சென்னை வடிகால் திட்டத்திற்கு சேர்த்து 1010 கோடி ரூபாய் நிதி மட்டுமே கொடுத்துள்ளது. நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு நடத்தினார். பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
ஆலோசனை: தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆலோசனை மேற்கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (7.12.2023) சென்னைக்கு வருகை தந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சருடன், ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் கமல் கிஷோர் ஆகியோரும் வருகை தந்தனர்.
பின்னர், சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications