"அது" நடந்துடுச்சா? டெல்லியில் திடீர்னு "அந்த" மீட்டிங்?.. அப்ப திமுக கூட்டணி? ஸ்டாலின் விடமாட்டாரே
சென்னை: கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நடந்து கொண்டிருந்த அதேநேரத்தில், இன்னொரு முக்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.. இதுகுறித்த ஸ்பெஷல் நியூஸ் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
கடந்த தேர்தலின்போது, எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை லட்டு போல காங்கிரசுக்கு அள்ளி தந்தது திமுக.. ஆனால், இந்த முறை அவ்வளவு சீட் தர வாய்ப்பில்லை என்கிறார்கள்.. ஆனாலும், எப்படியாவது 20 சீட்டுக்களை வாங்கிவிட வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாகவே, தமிழக காங்கிரஸ் முயன்று வருகிறது.

முயற்சி: அதுமட்டுமல்ல, 20 சீட் கேட்டால்தான், 15 சீட்டாவது கிடைக்கும் என்பதால், சீட் எண்ணிக்கையை உயர்த்தி கேட்கும்படி, மேலிட காங்கிரஸே அப்போது உத்தரவிட்டதாம். அதனால்தான், அதிக சீட்களை திமுகவிடம் கேட்டு வாங்குவோம் என்று மாநில தலைவராக அழகிரியும் சொல்லி கொண்டேயிருந்தார்.
ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமான நிலையிலும்கூட, இதுவரை உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.. ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதியை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த கேட்டு வருகிறதாம்.. ஆனால், இப்படி ஒரு தகவல் காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளியான அதேசமயம், மூத்த தலைவர் டி. ஆர் பாலுவை மாநிலங்களவை எம்பியாக ஆக்க திமுக தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதிகள்: அதுமட்டுமல்ல ஒற்றை இலக்கத்தில், 8 தொகுதிகள் வரை மட்டுமே காங்கிரசுக்கு கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் பரபரத்தன. இந்நிலையில், புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.
செல்வப்பெருந்தகையை பொறுத்தவரை, அழகிரி பதவியில் இருந்தபோது 8 சீட்டுகள் வரை ஒதுக்க திமுக முன்வந்ததால், தன்னுடைய தலைமையில், எப்படியாவது இரட்டை இலக்க சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால், தனக்கான மதிப்பும் கட்சியில் எகிறும் என்று நம்புகிறாராம்.. அதனால்தான், 15 தொகுதிகளை திமுகவிடம் செல்வப்பெருந்தகை கேட்டதாகவும், வழக்கம்போல் திமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.
என்ன காரணம்: இப்படிப்பட்ட சூழலில்தான், கலைஞரின் நினைவிடம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்துதான், நமக்கு சில பிரத்யேகமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில், கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட திமுகவின் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதாவது, கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் அரசியலுக்கு இடமில்லாமல் அனைத்து தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றே விரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.. ஆனாலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
அப்செட்: இது பிரச்சனை இல்லை... ஆனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் யாருமே விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி உள்ளது.
தமிழகத்தில் காங்கிரசுக்கு மொத்தம் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். 8 எம்.பி.க்களும் கலந்து கொள்வதாக இருந்ததாம். ஆனால், விழாவுக்கு முதல் நாள் எம்.பி.க்களை தொடர்புகொண்டு, "விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் " என்று காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டதாம். அதனால்தான் எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லையாம்.
சீட் எண்ணிக்கை: அதேபோல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் விழாவுக்கு போகக்கூடாது என்பதால் தான், தொகுதிகள் குறித்து விவாதிக்கிறோம் என்ற பேரில் செல்வத்தையும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாரையும் டெல்லிக்கு வரவழைத்து விட்டதாம் காங்கிரஸ் மேலிடம். அதாவது சீட் எண்ணிக்கை, தொகுதிகள் முடிவு செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் எங்களுக்கு திமுக மீது அதிருப்தியிருப்பதாக காட்டுவதற்காகவே இப்படிப்பட்ட முடிவாம் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்ததாம்..
செல்வப்பெருந்தகை: இதனை அறிந்த செல்வப்பெருந்தகையும், "கலைஞர் நினைவிட திறப்பில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி வருகிறேன்" என்று காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அனுப்பினாராம்.. ஆனால், அது ஏற்கப்படாமல், உடனே டெல்லிக்கு வாருங்கள் என உத்தரவு வந்ததால், செல்வப்பெருந்தகையும் விழாவில் கலந்து கொள்ளவில்லையாம்.
ஆக, திமுக மீது காங்கிரஸ் கோபமாக இருக்கிறது போலும்.. அதிக வருத்தத்தில் உள்ளது போலும்.. தேர்தல் சமயங்களில் இதெல்லாம் ஒருவகையான யுக்திகள் என்றாலும், காங்கிரஸை தவிர்த்துவிட்டு திமுகவால் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை..
என்ன காரணம்: காரணம், தேசிய அளவிலும் காங்கிரசின் தயவு திமுகவுக்கு தேவையாக இருக்கிறது. அத்துடன், சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி தீயாய் காய்நகர்த்தி வரும்நிலையில், அந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களையும் திமுக தக்க வைக்க வேண்டி உள்ளது.
அதுமட்டுமல்ல, அதிமுகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. திமுக கூட்டணி எப்போது இறுதியாகும்? யாராவது திமுகவுடன் அதிருப்தி ஏற்பட்டு, அங்கிருந்து கூட்டணியை முறித்து கொண்டு வெளியே வருவார்களா? என்று "துண்டு" போட்டு காத்துக் கொண்டிருக்கிறதாம் அதிமுக..
அதனால், கூட்டணி விஷயத்தில் திமுக இன்னும் கொஞ்சம் "இறங்கி" வந்து, சீட் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் "ஏறி" வந்து, குறிப்பிட்ட அளவில் சீட் எண்ணிக்கையை காங்கிரசுக்கு தரும் என்றே நம்பப்படுகிறது.. விரைவில் எல்லாம் சுபமாய் முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.!!












Click it and Unblock the Notifications