"ஜெகத் கஸ்பர்".. வெறும் கலெக்ஷன்.. இந்துக்கள் என்றாலே திமுக இப்படித்தான்.. சீறும் பாஜக.. என்னாச்சு?
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத, முதல்வர் ஸ்டாலினை, தமிழக பாஜக தலைவர்கள் தொடந்து விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த விவாதங்களும் சோஷியல் மீடியாவில் சூடுபிடித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது... இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை.. இது ஒரு பிரச்சனையாக வெடித்தது.. குறிப்பாக பாஜக தலைவர்கள் இதை பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

முத்தரசன்
இந்நிலையில், திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாரிமுனையில் நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.. அப்போது, "அமைச்சர் சேகர்பாபு கடவுள் நம்பிக்கை உடையவர்.. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.. ஆனால் எங்களுக்குள் நட்பு உள்ளது.. கணேசனின் தாயாரான பார்வதியம்மாள் பல மாதங்களாக, பல வருடங்களாக குளிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் கங்கைக்கு குளிக்க போயிருக்கிறார்... குளிக்கும்போது ஏராளமான அழுக்கு வந்திருக்கிறது.

அழுக்கு - விநாயகர்
அந்த அழுக்கை உருட்டி வைத்திருக்கிறார். அதுதான் விநாயகராகி விட்டது.. குளித்து முடித்த பிறகு அந்த அழுக்கை தண்ணீரில் கரைத்து விட்டிருக்கிறார்... இப்படித்தான் வரலாற்றில் கூறுகிறது.. அதனால், அந்த அழுக்கை போய் நாங்கள் ஏன் கும்பிட வேண்டும்? அந்த அழுக்குக்கு எதற்காக நாங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும்" என்று முத்தரசன் பேசியிருந்தார். இந்த கருத்திற்கும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கொந்தளித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

வாய்க்கொழுப்பு
அதில், "விநாயகரை இழிவுபடுத்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கைது செய்யப்பட வேண்டும். மத துவேஷங்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்ற கழக அரசு மதசார்பற்றது என்பது உண்மையென்றால், தாமதிக்காமல் தலைவர் என்ற போர்வையில் இருக்கும் வாய்க்கொழுப்பெடுத்த, அநாகரீக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் என்ற சமூக விரோதியை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வானதி
இதற்கு பலரும் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.. மற்றொருபக்கம், பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஸ்டாலினையும் பாஜக விடாமல் விமர்சித்து கொண்டிருக்கிறது.. "ஒரு மாநில முதல்வராக, ஸ்டாலின் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும், எந்த இந்து பண்டிகை வந்தாலும் அவர் இப்படித்தான் செய்கிறார், வாழ்த்துக்களை சொல்வது கிடையாது என்று பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியிருந்தார்.. அதேபோல, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், ஸ்டாலின் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்..

கிறிஸ்தவ பண்டிகை
மாநிலத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்ற மத நிகழ்வுக்கு முதல் நபராய் வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் அவர்கள், இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காப்பதுதான் மதசார்பா? இதன் மூலம் மத மோதலுக்கு முதலமைச்சர் வித்திடுகிறார்.. ஆனால் பிரதமர் இஸ்லாமிய பண்டிகைக்கு, கிறிஸ்துவ பண்டிகைக்கு என அனைத்து மதத்தினருக்கு வாழ்த்து சொல்லுகிறார். ஆனால் அவரை பார்த்து ஒரு மதத்திற்காக ஆட்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்று அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.

ஜெகத் கஸ்பர்
இதில் ஒருபடி மேலே சென்ற எச்.ராஜா, மேடை போட்டு ஸ்டாலினை விமர்சித்தார். "விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர், அடுத்த முதல்வராக வரக்கூடாது... வர விடமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துகொள்வோம்... விநாயகர் சதுர்த்திக்கு கூடினோம் கலைந்தோம் என்றில்லாமல், வீடுவீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விடக்கூடாது என்று சொல்ல வேண்டும்.. இது பேரியக்கமாக உருவாக வேண்டும். இந்த அரசாங்கம் மூளை கெட்டுப்போய் திரிய கூடாது.. அந்த கிறித்துவ பாதிரியார் ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும்.,. NGOக்கள் அனைத்தும் கலெக்சனுக்காக செயல்படுகின்றன.. வெடிமருந்து குன்றின் மீது தமிழ்மக்கள் அமர்ந்துள்ளனர். ஏனென்றால் இங்கு திராவிட மாடல் உள்ளது" என்று கூறியிருந்தார்.

இஸ்லாமிய பண்டிகை
அதேபோல, இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் ஜி.கார்த்திகேயன் பேசும் போது, ''திராவிடம் என்ற பெயரால், தமிழை வளர்ப்பதைவிட அதிகமாக அழித்து வருகின்றனர் என்றார்... ஒட்டுமொத்த தமிழக பாஜகவும், திமுகவை கண்டித்து கேள்வி எழுப்பி வரும்நிலையில், திராவிட அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர், சோஷியல் மீடியாவில் சில சந்தேகங்களை பாஜகவிடம் எழுப்பி வருகிறார்கள்..

விநாயகர்
"முத்தரசன் சொன்ன, விநாயகர் உருவான கதை பொய் என்றால், நிஜ வரலாறு என்ன? விநாயகர் எப்படி உருவானார்? என்று டவுட் கேட்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, "இந்த சிலை உடைப்பு விழாவை உத்தரபிரதேச மக்கள் மற்றும் உபி அரசு புறக்கணிக்கிறது.. காரணம், இது முற்றிலும் மஹாராஷ்ராவை சேர்ந்த ஒரு கொண்டாட்டம். தமிழகத்தில் இதற்கு எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள்? கெடுபிடிகள்? ஊர்வலங்கள்? என்று கேட்கிறார்கள்.

மடம் + ஜீயர்
அதுமட்டுமல்ல, ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா சொன்னதற்கு, "இஸ்கான் அமைப்பு சிவராத்திரி, பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதில்லையாமே.. உண்மையா.!? காஞ்சி மடம் ராம நவமி, கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்வதில்லையாமே., உண்மையா.!? ஜீயர் மடம் சிவராத்திரி, பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதில்லையாமே.. உண்மையா.!? இவை எதையும் சைவ மடங்கள் கண்டு கொள்வதில்லையாமே., உண்மையா.!? மேலே உள்ள யாரும் பங்குனி உத்திரத்திற்கு வாழ்த்து சொல்வதில்லையாமே., உண்மையா.!? என்றும் கூடுதலாக சந்தேகங்களை கேட்டு கொண்டிருக்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications