காத்திருந்த பெரும் படை.. வராமல் "கல்தா" தந்த அமைச்சர்! அந்த கூட்டத்திலேயே ஆப்சென்டா! என்ன நடந்தது?
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளாத சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பில் விசாரித்ததில் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை மார்ச் மாதம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். அமைச்சர்களும் தங்கள் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்கிறார்கள்.
அந்த வகையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஸ்டாலினின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஸ்டாலின் பிறந்த நாள்
இந்த பொதுக்கூட்டம் நேற்று (28.03.2022) நடந்தது. அமைச்சர் தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி வரை அந்த கூட்டத்திற்கு அமைச்சர் வரவே இல்லை. இதனால் மாவட்ட திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அமைச்சர் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அவரே வராமல் இருந்ததை பார்த்து நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயம் தெரிந்து அப்பகுதி அதிமுகவினரும் இதை பற்றி கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளனராம்.

திமுக கூட்டம்
திமுகவில் இந்த விசயம் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் ஏன் வரவில்லை? என மாவட்ட திமுகவினரிடம் விசாரித்தபோது, ''மாவட்ட திமுகவில் சாதி அரசியல் கொடிக்கட்டிப் பறக்கிறது. இந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகம் பெரும்பான்மையாக இருக்கிறது. இருப்பினும் அமைச்சர் அன்பரசன், தனது சமூகத்தினருக்கே கட்சியிலும் அரசியலிலும் அதிக முக்கியத்துவம் தருகிறார் என்றும் கட்சியில் உள்ள மற்ற சமூகத்தினருக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும் மனத்தாங்கல் உள்ளது.

அமைச்சர் வரவில்லை
இது குறித்து தங்களின் ஆதங்கத்தை கட்சி தலைமைக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், பலனில்லை என்று மாற்று சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். அமைச்சரால் கட்சிக்குள் பிரச்சனை எனில், கட்சி தலைவரிடம் தான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த புகாரால் தலைமைக்கு போகாமல் தடுக்கப்படுகிறது. இப்படியிருந்தால் மாற்று சமூகத்தினரின் ஆதங்கம் தலைமைக்கு எப்படித்தான் தெரியும் ? என்ற மாற்று ஜாதியினர் கோபம் அடைந்துள்ளனராம்.

ஏன் வரவில்லை?
அதனால்தான், பொதுக்கூட்டத்திற்கு வருகிற அமைச்சரை மறித்து, அங்கேயே பல கேள்விகளை அவரிடம் கேட்க கட்சியில் இருக்கும் மாற்று சமூகத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஒரு பெரும் படையே திருக்கழுக்குன்றத்தில் குவிந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதனை அமைச்சர் முன்பே தெரிந்துகொண்டார். முன்பே தெரிந்து கொண்டதால்தான் அன்பரசன், பொதுக்கூட்டத்தை தவிர்த்துவிட்டார்.

விளக்கம்
கடைசி வரை அவர் வரவே இல்லை '' என்று கட்சியிலுள்ள மாற்று சமூக பிரமுகர்கள் தெரிவித்தனர். ஆனால் இதெல்லாம் காரணமில்லை. இது வதந்தி. அமைச்சர் வேறு பணிகளால்தான் வரவில்லை. அவருக்கு துறை ரீதியாக நிறைய பணிகள் இருந்தன. அதுதான் காரணம். வேறு காரணம் இல்லை. என்று அமைச்சர் அன்பரசன் தரப்பில் விசாரித்தபோது கூறுகிறார்கள்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications