"ஏன் தெரிலயா.. இங்கே தானே இருக்கேன்".. ஸ்கூலுக்குள் எகிறிய திமுக அமைச்சர்.. வெலவெலத்து போன ஆபீசர்ஸ்
கீதா ஜீவன், தூத்துக்குடி அரசு பள்ளி நிகழ்ச்சியில் அதிகாரிகளை கண்டித்துள்ளார்
சென்னை: சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியில் நடந்த அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்களால், தூத்துக்குடியே திணறிவிட்டது. என்ன நடந்தது?
அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில், கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசு பள்ளிகளில் பயில்வது குறித்தும் அதிக மாணவ, மாணவிகளை சேர்க்கும் விதமாகவும், தூத்துக்குடி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஆதவா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் அரசு பள்ளிகளில் மாணவ சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மாநகராட்சி சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

டென்ஷன் கீதாஜீவன்
சமூக நலத்துறை அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவன் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது... சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதற்கு அரசு அளித்து வரும் சலுகை காரணம் ஆகும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி
ஆகையால் அரசு பள்ளிக்கூடங்களில் படிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு வளமான எதிர்காலம் அமைய நீங்கள் அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. இதில் ரூ.18 ஆயிரம் கோடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு பெற்றோர் நன்றாகவே ஆதரவு தந்து வருகிறார்கள்..

ஊட்டச்சத்து
இது எல்லாவற்றையும்விட குழந்தைகள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது... இம்மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களில் பள்ளி மாணவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.. அதனால், குழந்தைகளை பெற்றோர் நன்கு கண்காணிக்க வேண்டும்... சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்...

கூப்பிடலயே ஏன்?
எனினும், இந்த விழாவுக்கு அமைச்சர் கீதாஜீவனை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது... அதேபோல, மேயர் ஜெகன் பெரியசாமியையும் கூப்பிடவில்லை என தெரிகிறது.. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் கூடம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, திடீரென அமைச்சர் அந்த பள்ளிக்கு வந்தார்.. அப்போது அங்கு அரசு விழா நடைபெற்றுக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.. உடனே அங்கிருந்த அதிகாரிகளிடம், "இந்த நிகழ்ச்சிக்கு ஏன் எங்களை கூப்பிடவில்லை? உள்ளூர் சட்டமன்ற உறுப்பினராக நான் இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியாதா? என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

மேயர் ஜெகன்
அப்போது பேசிய முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது... அங்கே கலெக்டரை கூட அழைக்கவில்லை.. தூத்துக்குடியில் மட்டும் தான் கலெக்டரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறோம் என்றார்.. இதைக்கேட்டதும், மேயர் ஜெகன் பெரியசாமி, "மாநகராட்சி பள்ளியில் முழுமையாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருக்கிறது.. அப்படி இருக்கும்போது, எப்படி இந்த பள்ளியில் நிகழ்ச்சி நடத்தலாம்? பள்ளியில் எதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி? என்று காரசாரமாக அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டார்.

மாறிமாறி கேள்வி
இப்படி மேயரும், அமைச்சரும் மாறி மாறி கேள்வி கேட்டதால், அதிகாரிகள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிவிட்டனர்.. இதற்காக அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர் என்றாலும், பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் இது சம்பந்தமாக புகார் கொடுப்பதாக அமைச்சர் கீதாஜீவன் சொல்லி விட்டு சென்றாராம்.. பள்ளி விழாவிற்கு அழைக்காத அதிகாரிகளை கீதாஜீவன் கண்டித்ததும், மேயர் கேள்வி எழுப்பியதும், தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications